தொடர்
இலக்கியம்
சாரம்
ஹருகி முரகாமிஆங்கிலத்திலிருந்து தமிழில்: ஸ்ரீதர்ரங்கராஜ் இவ்வாறாக, என்னுடைய இளம் நண்பன் ஒருவனுக்கு என்னுடைய பதினெட்டு வயதில் நடந்த விநோதமான சம்பவத்தைச் சொல்லிக்கொண்டிருந்தேன். எதனால் அந்தப் பேச்சு வந்தது என்று நினைவில்லை. நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது எப்படியோ வந்துவிட்டது. அது எப்போதோ வெகுகாலத்துக்கு முன்பாக நடந்த விஷயம். புராதன வரலாறு. அதற்கு மேலாக, அந்தச்சம்பவம் குறித்து என்னால் எப்போதும் எந்தவொரு முடிவுக்கும் வரமுடியவில்லை. “அப்போது மேல்நிலைப்பள்ளியை முடித்திருந்தேன், ஆனால் இன்னும் கல்லூரிக்குச் செல்லவில்லை” என்று விளக்கினேன். “கல்லூரி ரோனின்* என்பார்களே […]
மதிப்புரை
தெறிப்புகளுக்குள் ஒளிந்திருக்கும் திறவுகோல்
அதீதன் ‘கவிதைகள் கேள்விகளைக் கேட்கின்றன, நாமோ அவற்றுக்கான பதில்களை அவற்றிடமே தேடிக்கொண்டிருக்கிறோம்’. இதைத்தான், கவிதையின் சிறப்பாக உணர்கிறேன். கவித்துவத்தின் மாயவெளியில் அலைகிற வாசகனுக்குப் புலப்படும் யாவுமே கவிதையின் சாயலன்றி வேறில்லை. அவைதரும் சாத்தியப்பாடுகளைப் பின்தொடரும் ஒரு வாசகனாகத் தயாராகிக்கொண்டிருக்கிற எண்ணிலடங்கா பெருங்கூட்டத்தில் ஒவ்வொருவரும் தமக்கான தர்க்கநியாயங்களைக் கொண்டு கவிதைகளை அணுகுகின்றனர். அதை எழுதியவர், அப்பெருங்கடலின் ஒற்றைத்துளியாகக் கலக்கும்போது அவருக்கு இதுவரையில் அறிந்திடாத, கவிதையின் பரிமாணம் புலப்படத் தொடங்குகிறது,. இந்நிலையில், ஒரு கவிதை, வாசகனுக்குத் தருவது/ தரவேண்டியது/ தந்துகொண்டிருப்பது/ […]
“எல்லோர் வீட்டிலும் இருக்கும் கடுகு”
சிவசங்கர்.எஸ்.ஜே. வானம் பூமி, ஒளி இருள், நீர் நெருப்பு, போன்ற ஆதி இரட்டை எதிர்மறைகளில் ஒன்று வாழ்வும் மரணமும். மனித குலத்தின் தீராப்புதிர். மனிதர்களின் பிறப்போடு கூட வளரும் வளர்ப்பு மிருகம். மனிதக் குழுவின் நகைச்சுவை உணர்வுக்கான ஊற்று. புத்தர் தொடங்கி எல்லா ஞானிகளாலும் உணரப்பட்ட, விளக்கப்பட்ட தத்துவக்கூறு. இருத்தலின் அச்சமூட்டும் , முதிர்ச்சியூட்டும் விளங்கா விடுகதை. மரணம் யாராலும் விடுவிக்க முடியாத கணக்கு. மரணம் எல்லா வீடுகளிலும் இருக்கும் கடுகு.. மரணம் குறித்த விவரணைகள் தத்துவ […]
சிறப்பிதழ்
எம்.வி.வியும் நானும்
இராம. குருநாதன் 1994. ஒரு பகல்வேளையில் குடந்தை பஞ்சாமி அய்யர் உணவகத்தில் இருந்து எழுத்தாளர் விட்டல்ராவ் உணவு உண்டுவிட்டு வெளியே வரும்போது என்னைப் பார்த்ததும், ”சென்னையிலிருந்து எப்போது வந்தீர்கள்” என்று என்னைக் கேட்டார். ”எனக்குச் சொந்த ஊர் இதுதானே” என்றேன். ”சரி இப்போ எங்க போறதா இருக்கீங்க” என்றேன். ”தோப்புத்தெருவுக்குப் போகணும். வழி தெரியலே” என்றார். ”நான் உடனே எம்.வி.வி சாரைப் பார்க்கப் போறிங்களா” என்றேன். சரியான கோடைக்காலம். அக்னி நட்சத்திர சமயம். வெய்யில் கொளுத்தியது. நானும் […]
-
அன்பு தமிழரசு commented on நுண்மியும் நன்மை தரும்: அன்புமிக்க அய்யா! வணக்கம்! 'அடவி'யில் வெளிவந்த தங்
-
A.S.Ravi, District Judge, Coimbatore commented on நுண்மியும் நன்மை தரும்: உண்மையான சங்கதிகள். கரோனாவுக்கு முன்பு இருந்த நிலை
-
Karuna commented on நுண்மியும் நன்மை தரும்: Fantastic sir. Tamil lines are nice
-
செ.ஆடலரசன் commented on பனி வரிகள்: கொரியக்கவிதைகளை படிக்க ஆவலேர்படுத்துகிறது சான்றுக
-
வே. நி. சூர்யா commented on கவர்ச்சி: அருமை. காதுகள், நித்தியகன்னி இந்த நாவல்கள் எங்கிரு