Adavi Logo

ஆதி பதிப்பகம்

பிற

இனியவன் இறந்துவிட்டான்
குறுநாவல்
ஜீ. முருகன்
2009
ரூ.30

இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தங்களது தத்துவங்கள், கொள்கைகள், நடைமுறை களிலிருந்து மெல்ல விலகி பூர்சுவா கட்சிகளாக மாறி வருவதைக் கவனித்துவரும் வேளையில், சிங்கூர் பிரச்சனையில் மார்க்சிஸ்டுகள் பின்பற்றிய நடைமுறைகள் அக்கட்சி ஒரு பூர்சுவா கட்சி யாகவே முழுமையுற்று நின்றதைக் காணமுடிந்தது. தொழில் வளர்ச்சி என்ற மான் தோல் போர்த்தி முதலாளித்துவப் புலியை உள்ளே கொண்டுவர முயன்றது; விவசாயிகளை வஞ்சித்தது; எதிர்ப்பு களை ஆயுதம் கொண்டு ஒடுக்கியது. அறிவுஜீவி களும் கலைஞர்களும் கண்டிக்கும் வகையில் அதன் செயல்பாடுகள் இருந்தன. இந்தத் தலைகீழ் மாற்றத்தைக் கண்டு பலரும் அதிர்ந்தனர். கம்யூனி ஸத்தின் மீதான நம்பிக்கை இன்னும் வடிந்தது. அதேபோல சற்று நம்பிக்கைத் தருவதாக இருந்த என் சமூகம் சார்ந்த ஒரு கட்சி, நெருங்கிச் சென்று பார்த்தபோது, அது அதிகாரத்தின் சீழ்வடியும் புண்களை அலங்காரமாகச் சூடி நின்றது. அது அறிவை, கலைகளை தன் அதிகாரத்தை நோக்கிய விழைவுக்குச் சாதகமாக்க முயன்றுகொண்டி ருந்தது. ஒழுக்கத்தைப் போதிக்க முயன்றது. இந்த முயற்சிக்கான ஆதரவாளர்களையே தன் அருகே நெருங்கி வரச் செய்தது. மற்றவர்களை எல்லை யிலேயே இனம் கண்டு திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தது.
ஜீ. முருகன்

காண்டாமிருகம்
தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
ஜீ. முருகன்
2010
ரூ.100
காண்டாமிருகம் தொகுப்பிலுள்ள அனைத்துக் கதைகளும் வெவ்வேறு விதங்களில் புதிய சாத்தியங்களை நோக்கி எழுதிப் பார்க்கப்பட்ட கதைகள். அனுபவம், எதிர் அனுபவம், அனுபவத்தின் உள் அனுபவமான கனவுநிலை, கனவில் ஏற்படும் விழிப்பு, கூட்டுச் சமூகத்தின் ஆன்மிகம், தனிமனிதனின் ஆன்மிக வறட்சி இவைகளே ஜீ. முருகனின் சிறுகதைக்குள் நாம் உணரும் திரட்சி.

(இருப்பில் இல்லை)

ஜப்பானியத் தேவதைக் கதைகள்
சிறுவர் இலக்கியம் / தேவதைக் கதைகள்
எய் தியோடோரோ ஒசாகி
தமிழில்: ச. ஆறுமுகம்
2011
ரூ.180
ஜப்பானிய தேவதைக் கதைகளை ஆங்கிலத்தில் எழுதும்போது உள்ளூர் வாசனையைக் கொண்டுவருவதற்காக அல்லது கதைத்தேவைக்கான விவரிப்புகளுக்காக அல்லது எனக்கு விருப்பமாக இருந்ததால் எனது கற்பனையையும் சேர்த்திருக்கிறேன். ஒன்றிரண்டு இடங்களில் நிகழ்வுகளை வேறு படைப்புகளிலிருந்து பெற்று மாற்றியமைத்திருக்கிறேன். என் நண்பர்களில் வயதானவர், இளைஞர், அமெரிக்கர், ஆங்கிலேயர் எவராயிருந்தாலும் சிலர் ஜப்பானிய மொழியின் அழகிய மரபு மற்றும் புராணக் கதைகளையும் தேவதைக் கதைகளையும் எப்போதுமே மிகுந்த ஆவலுடன் கேட்பதைக் கண்டிருக்கிறேன்.
எய் தியோடோரோ ஒசாகி

இத்தொகுப்பிலுள்ள அனைத்துக் கதைகளும் கற்பனை வளம் மிக்கவை. அக்கால ஜப்பானிய வாழ்க்கை முறைகள் அழகான முறையில் விவரிக்கப்பட்டுள்ளன. மரக்குடில்கள், அவற்றின் முற்றம், தாழ்வாரங்கள், வைக்கோல் செருப்புகள், அகன்ற தொப்பிகள், தொளதொளத்த சட்டைகள், கிமோனோ ஆடைகள், ஷிண்டோ மரபுக் கோவில்கள், புல் செதுக்கும் கருவி, விசிறிப்படை என்ற போராயுதம், பரிசுகளை வைத்து வழங்குவதற்கான அழகிய வேலைப்பாடுகள் அமைந்த அரக்குப் பெட்டிகள் எனப் பலவும் சொல்லப்பட்டிருக்கின்றன. காடுகள், கடற்கரைகள், கடற்பயணங்கள், கட்சுரா மரங்கள்,பருவ காலங்கள், கதிர், நிலவு, பெர்சிம்மான் பழங்கள், சேக் எனப்படும் அரிசிமது அனைத்தும் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளன. திருமணம், பிரசவம், மரணம் போன்றவற்றின்போது கடைப்பிடிக்கப்படும் சடங்குகள், குழந்தைகளுக்காக நடத்தப்படும் பொம்மைத் திருவிழாக்கள், விருந்துகள் முதலானவும் விவரிக்கப்பட்டுள்ளன.
ச. ஆறுமுகம்

ஆந்த்ரேய் தார்க்கோவஸ்கியின் ஏழு காவியங்கள்
திரை (சினிமா கட்டுரைகள்)
ஜீ. முருகன்
2012
ரூ.70
ஆந்த்ரேய் தார்க்கோவஸ்கியின் ஏழு படங்களும் ஏழு புனித நூல்கள் எனச் சொல்வது மிகையான கூற்றாகாது. வேறு யாருடனும் ஒப்பிட முடியாதவர் தார்க்கோவஸ்கி. அவரிடம் வெளிப்படும் ஆழ்ந்த ஞானம், மேதமை, இலக்கியம், இசை, ஓவியம் போன்ற மற்ற கலைகள் மீதான ஈடுபாடுகள் அவரை மேலான இடத்தில் அமர வைக்கின்றன. சில வேளைகளில் அவர் கடவுளின் தூதுவன் போலவே தோற்றம் தருகிறார். அவருடைய படங்களைப் பார்க்கக் கிடைத்ததே பெரும்பேறு எனவும் அவற்றைப் பார்ப்பது என்பது நம்மைப் பரிசுத்தமாக்கிக்கொள்ளும் காரியமே எனவும் தோன்றும்.

(இருப்பில் இல்லை)

இடிந்த கரை
கவிதை
குட்டி ரேவதி
2012
ரூ.50
தமிழகத்தின் அண்மைக்கால முக்கியப் போராட்டமான இடிந்தகரை மக்களின் வாழ்வியல், அனுபவம், போராட்டம், மனத்திடம் ஆகியவற்றை குட்டி ரேவதி தன் கவிதையில் அழுத்தமாகவும் வலியோடும் இப்போராட்டத்திற்கு தன் பங்களிப்பைத் தந்ததன்மூலம் ஏற்பட்ட அனுபவத்தைப் பதிவு செய்துள்ளார்.

வேட்டைக்கத்தி
மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்
தமிழில் : ச. ஆறுமுகம்
2012
ரூ.70
வேட்டைக்கத்தி தொகுப்பிலுள்ள நான்கு கதைகளையும் முதல் வாசகனாக இருந்து, பத்திரிகைகளில் வெளிவரும் முன்பே படித்திருக்கிறேன். பெரும்பாலான கதைகளை
ச. ஆறுமுகம் மொழிபெயர்க்கும் முன்பே என்னிடம் சொல்லியிருக்கிறார். மொழிபெயர்த்த பின்பு, அவற்றை வாசிக்கும்போது பெரிய வித்தியாசம் ஒன்றையும் நான் உணர்ந்ததில்லை. அவர் சிறந்த கதை சொல்லி என்பதில் சந்தேகமில்லை. ஹாருகி முரகாமியின் இரண்டு கதைகளும் மெய்லி மெலாய், மோனிகா ஹ்யூக்ஸ் ஆகியோரின் முறையே ஒரு கதையும் இத்தொகுப்பில் உள்ளன.
ஜீ. முருகன்

நெடும்பயணம்
நாடகம்
கி. பார்த்திபராஜா
2013
ரூ.80
நெடும்பயணம் நான்கு நாடகங்களின் தொகுப்பு நூல். பார்வையாளனோடு நேரடியாக உறவாடும் கலை வடிவங்களில் முதன்மையானது நாடகம். அவ்வடிவத்தினூடாகத் தமிழ்ச் சமூகத்தில் இயங்குநிலைகளை ந்நாடகங்கள் படம் பிடிக்கின்றன. வரலாற்றின் நெடிய முற்பகுதியிலிருந்து இந்நாடகப்பனுவல்கள். தமிழின் நீண்ட நெடிய நாடக மரபில் இப்பனுவல்களும் புதிதாய்ப் பூத்தமலர்களென இணைகின்றன.
(இருப்பில் இல்லை)

கோடையில் ஒரு மழை
மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்
தமிழில்: ச. ஆறுமுகம்
2014
ரூ.120
மொழிபெயர்ப்பில் ஈடுபடும்போது, அப்படைப்பு குறித்தும், அது உணர்த்தும் செய்தி குறித்தும், படைப்புத் திறன் குறித்தும், ஏற்கெனவே வாசித்த போதிருந்த புரிதலைவிடவும் நுண்மையான பல விவரங்கள் புலனாகின்றன. மகிழ்ச்சியைத் தருகிற அந்தக் கூடுதல் புரிதலுடன், படைப்பாளியின் தொனி மாறாமல், படைப்பின் பண்பாட்டு வாசம் குன்றாமல், மொழிபெயர்க்க வேண்டுமென்ற தீராத ஆவலுடன் முனையும்போது பெயர்ப்பு மொழியின் மரபு மற்றும் பண்பாட்டுத் தடைகளை எதிர்கொள்ள வேண்டியதாகிறது. அதனை வெற்றிகொள்ளும்போது கிடைக்கின்ற திருப்தி அதிக உற்சாகம் தருவதாக இருக்கிறது. மீண்டும் மீண்டும் மொழிபெயர்ப்பில் ஈடுபடுவதற்கான தூண்டுதலாகவும் அதுவே அமைகிறது. ஆக, மொழிபெயர்ப்புப் பணி எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியும் திருப்தியும் தருவதாயிருக்கிறது. அதனாலேயே மொழிபெயர்ப்பில் தொடர்ந்து ஈடுபடுகிறேன்.
ச.ஆறுமுகம்

எதிர்கதையாடல் நிகழ்த்தும் பிரதிகள்
கட்டுரை
சுப்பிரமணி இரமேஷ்
2014
ரூ.120
சுப்பிரமணி இரமேஷ், கடந்த இருபது ஆண்டுகளில் வெளிவந்த நவீனத் தமிழ்ப் படைப்பிலக்கியத்தின் படைப்புகளைத் தெரிவுசெய்து, ஆழ்ந்து வாசித்து இத்தொகுப்பில் விவரித்து தன் பார்வையை வெளிப்படுத்தியுள்ளார்.

சங்கக் காலச் சமூகவியல்
ஆய்வுக் கட்டுரை
கி. பார்த்திபராஜா
2014
ரூ.200
வகுப்பறைக்கு வெளியே நாடகப் பயிலரங்கில் மாணவர்களுக்குப் போதிப்பதில், அவர் காட்டிய ஈடுபாடு என்னை ஆச்சரியப்படுத்தியது. இலக்கிய படைப்புகள் குறித்த விமர்சனத்திலும் கி.பார்த்திபராஜா காத்திரமாகச் செயல்பட்டார். எத்தகைய இக்கட்டான சூழலிலும், கசப்புப் பொங்கி வழிந்தாலும்கூட அவருடைய எழுத்துகளில் நம்பிக்கையின் ஒளிக்கீற்று தென்படுகின்றது; விளிம்புநிலையினருக்கு ஆதரவான குரல் ஒலிக்கின்றது. கடந்த பத்தாண்டுகளில் இலக்கிய விமர்சனம், நாடக ஆக்கங்கள் என விரியும் கி.பார்த்திபராஜாவின் முயற்சிகளைத் தொடர்ந்து அவதானித்துவரும் எனக்கு அவருடைய ஏக்கமும் தேடலும் புலனாகின்றன; இலக்கியச் செயல்பாடுகள், நம்பிக்கை அளிக்கின்றன.
ந. முருகேசபாண்டியன்

(இருப்பில் இல்லை)

மரபிலக்கியம்: வளர்ச்சியும் தாக்கமும்
ஆய்வுக் கட்டுரை
கி.பார்த்திபராஜா
2016
ரூ.100
(இருப்பில் இல்லை)

ரில்கேயின் கடிதங்கள
மொழிபெயர்ப்புக் கட்டிதங்கள்
தமிழில்: சா. தேவதாஸ்
2016
ரூ.100

ரில்கே கடிதங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவற்றின் இத்தொகுப்பு, கவிதை, ஓவியம் மற்றும் சிற்பம் தொடர்பானது. இளம் கவிஞனுக்கு எழுதப்பட்ட பத்துக் கடிதங்களும், பால்செஸான் ஓவியங்களைப் பற்றியும் ரோடினது சிற்ப ஆளுமை பற்றியும் பேசுவது. சமூகத்தில் கலை- இலக்கியத்தின் பங்கு பணி என்ன, கடவுளின் மதத்தின் இடத்தை கலை/ கவிதை இட்டு நிரப்புமா என்னும் பிரச்சனைகளை/கேள்விகளை எழுப்பி நுட்பமாக விவாதிப்பது.

ஜீ. முருகன் சிறுகதைகள்
சிறுளதைகள்
ஜீ.முருகன்
2017
ரூ.320

கூர்ந்து கவனித்தால் நேரடியாகவும் மறைந்தும் பாலியல் வேட்கையின் பல பரிணாமங்கள் விரவிக் கிடக்கும் முருகனின் கதைகளில் அதன் அடிப்படை என்று சொல்லப்பட்டிருக்கிற காதல் என்கிற மனம் சார்ந்த வஸ்து இல்லவே இல்லை என்பதை வாசகர்கள் ஆச்சரியத்துடன் கண்டுபிடிக்க முடியும். பாலியல் வேட்கையை இயல்பூக்கம் என்றும் காதலை மனித இனக் கலாச்சார வளர்ச்சியின் விளைபொருள் என்றும் வைத்துக்கொண்டால் முன்னதை உடலுக்கும் பின்னதை மனதிற்கும் இணை வைக்க முடியும். எனில் உடலை இயற்கையின் சிருஷ்டி என்றும் மனதை சமூகத்தின் கண்டுபிடிப்பு என்றும் பொருள்கொள்ள, முருகனின் கதைகள் ஏன் இயல்பாகவே காம வயப்படுமளவிற்குக் காதல் வயப்படுவதில்லையென்பது விளங்கும்.
பா.வெங்கடேசன்

(இருப்பில் இல்லை)

திருமார்புவல்லி
கவிதைகள்
ஸ்ரீஷங்கர்
2017
ரூ.60

உடலின் ஐம்புலன்களுக்கும் இன்பம் எனும் வேட்கையின்படி இசை, காமம், வெளி, அகம், வாசனை என, ஒரு பொம்மி எனும் உருவிலியை, இச்சியை, நீலியை, அணங்கைப் பின்தொடரும் காதல் பாடல்களை இத்தொகுப்பில் கொண்டு கூட்டி யின்/யான் எனும் சீன விகிதப் பௌதிகத்தை ஆண்துபெண் மொழியாக்க முயல்கிறார் ஸ்ரீஷங்கர்.  
யவனிகா ஸ்ரீராம்

நா.வானமாமலையின் பள்ளுப் பாட்டு ஆராய்ச்சி
ஆய்வுக் கட்டுரை
தொகுப்பாசிரியர்: மகாராசன்
2017
ரூ.60

பள்ளு இலக்கியங்கள் குறித்து வெளிவந்துள்ள ஆய்வுகள் பெரும்பாலும் நேர்மறையாகவும் எதிர் மறையாகவும் வழிமொழிந்தும் அமைந்திருப்பவை. அவ்விலக்கியங்கள் குறித்து ஆழமான விரிவான மீளாய்வுகள் இன்னும் வெளிவரவில்லை. வஞ்சிக்கப்பட்ட உழவுக்குடிகளின் தொழில் மரபு, பண்பாடு, வரலாறு பற்றிய உரையாடல்களும், பள்ளு இலக்கியம் பற்றியதான உரையாடல்களும் வளர்த்தெடுக்கப்பட வேண்டியவை. இவை பற்றின மீளாய்வுகள் தொடர்வதற்கான திறப்புகளைத் தான் நா.வானமாமலை தமது பள்ளுப் பாட்டு ஆராய்ச்சிக் கட்டுரைகளின் வழியாகப் புலப்படுத்தியுள்ளார். 

ஆண் காக்கை
கவிதைகள்
சுப்பிரமணி இரமேஷ்
2017
ரூ.60

சுப்பிரமணி இரமேஷின் கவிதைகளில் இருண்மையில்லை; மிகச்சிக்கலான மொழிப்பிரயோகம் இல்லை; அர்த்தங்கள் ஒத்திப்போடப்படுவதில்லை; சொற்பின்னும் மாயவலைகளில்லை. மிக எளிய மனிதர்களின்  உளப்பாடுகளைக் கண்டுகொள்ளும்  உள் ஆளாயிருந்து சூழலைக் காட்சிப்படுத்திக்கொண்டே செல்கிறார். மையத்தை நோக்கிச் சொற்களைக் குவிக்காமல் விளிம்புகளைப் பொருட்படுத்திக் காட்சிகளைக் கூர்மைப்படுத்துகிறார்.
கல்யாணராமன்

சுளுந்தீ (மூன்றாம் பதிப்பு)
நாவல்
இரா.முத்துநாகு
2018
ரூ.450

தமிழ் நிலத்தின் மருத்துவ அறிவும் நுட்பமும் முறைகளும் கற்றுத் தேர்ந்திருந்த சித்த மருத்துவப் பண்டுவர்களான நாவிதர் பற்றிய விரிவான விவரிப்புகள் சமூக முக்கியத்துவம் வாய்ந்த செய்திகள் மட்டுமல்ல; தமிழில் இதுவரையிலும் பதிவாகாத செய்திகளும் கூட. தமிழ் நிலத்தின் தமிழ்ப் பூர்வீகக் குடிகளைக் குறித்தும், வந்து குடியேறிய தமிழ் அல்லாத குடிகளைக் குறித்தும் மிக விரிவாகவும் நுணுக்கமாகவும் நேர்மையாகவும் இந்நூல் பதிவு செய்திருப்பதாகவே என் வாசிப்பில் உணர்கிறேன். தமிழ்ச் சமூகத்தின் தவிர்க்க முடியாத வரலாற்று ஆவணமாகவே இப்பெருங்கதை நிலைத்திருக்கப்போகிறது என்பதே இந்நூலின் சிறப்பாகும்.”
முனைவர் மகாராசன்

தங்கமான எங்கள் ஊர்
சிறுவர் இலக்கியம்
முஸ்தாய் கரீம்
தமிழில் பூ. சோசுந்தரம்
2019
ரூ.150

தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு
ஆய்வுக் கட்டுரைகள்
மகாராசன்
2018
ரூ.120

தமிழ் எழுத்தின் வரலாறு என்பது மொழியியல் வரலாறு மட்டுமல்ல. அது, மானுடவியல், தொல்லியல், இலக்கணம், இலக்கியம், அறிவியல், சமூகவியல், பண்பாட்டியல் போன்ற பின்புலங்களோடும் உறவாடிக் கிடக்கின்ற ஒன்றாகும். இவற்றையெல்லாம் ஒருசேர வைத்துப் பார்க்கும்போதுதான் தமிழ் எழுத்தின் வரலாற்றுப் பின்புலத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். அதற்கான உரையாடல் திறப்புகளைக் கொண்டிருப்பதோடு, தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபானது தனித்துவமான அறத்தையும் அழகியலையும் அரசியலையும் உள்ளீடாகக் கொண்டிருப்பதை அடையாளப்படுத்துகிறது இந்நூல்.

பண்பாட்டு அழகியலும் அரசியலும்
கட்டுரைகள்
மகாராசன்
2018
ரூ.120

பட்ட பாடுகளும் படுகின்ற பாடுகளுமான வாழ்க்கைப் பாடுகளையே மனித சமூகம் பண்பாட்டு வெளியாய்க் கட்டமைத்திருக்கிறது. தமிழர் வாழ்வியலோடு பிணைந்திருக்கிற பண்பாட்டுக் கூறுகள் தனித்த அழகியலோடும் அறத்தோடும் அரசியலோடும் புலப்படக் கூடியவை. ஒற்றைப் பண்பாடு அல்லது ஒருமுகப் பண்பாடு என்பதெல்லாம் அதிகாரத்தோடும் அடக்குமுறைகளோடும் தொடர்புடைய சாயலைக் கொண்டிருப்பவை. தமிழ் நிலப் பெருவெளியில் காணலாகும் பண்பாடு என்பதெல்லாம் பன்மைப் பண்பாடுகளின் கூட்டுத் தொகுப்புதான். பண்பாட்டு வெளிகளை அறிதலும் புரிதலும்கூட, மக்கள் வாழ்வியலைக் கற்பதுதான். ஏனெனில், மக்கள்தான் பண்பாட்டை வாழ வைக்கிறார்கள்; தம் வாழ்வையே பண்பாடாய் வடிவமைத்திருக்கிறார்கள். பன்முகப்பட்ட பண்பாட்டுக் கோலங்களைக் குறித்த அறிதலும் புரிதலும் சற்றுக் குறைவாய் நிலவிக்கொண்டிருக்கும் தமிழ்ச் சூழலில், தமிழரின் பண்பாட்டுத் தனித்துவங்களைக் குறித்த எடுத்துரைப்புகளை முன்வைத்திருக்கிறது இந்நூல்.

ஏறு தழுவுதல் (வேளாண் உற்பத்தியின் நிகழ்த்துப் பண்பாடும் வரலாறும்)
கட்டுரை
மகாராசன்
2017
ரூ.50

பொருளியல் சுரண்டலை நோக்கமாகக் கொண்ட உலகமய ஒற்றைப் பண்பாட்டு மேலாதிக்கச் செயல்பாடுகளும் கைகோர்த்துக்கொண்டு உள்ளூர் அடையாளங்களையும் அழித்துவருகின்றன. அதன் ஒரு முயற்சிதான் ஏறு தழுவல் எனும் மாடு தழுவல் பண்பாட்டின் மீதான இந்திய ஒன்றிய அரசின் தடை.

கராதே
கவிதைகள்
ராணிதிலக்
2018
ரூ.20மூன்று ஆண்டுகள்
நாவல்
அந்தோன் சேகவ்
தமிழில் அ.கிருஷ்ணமூர்த்தி
2019

‘மூன்று ஆண்டுகள்’ கதை பூரணத்துவம் அடையாத காதலை வருணிக்கிறது. மாபெரும் ருஷ்ய எழுத்தாளரான அந்தோன் சேகவ் (1860-1904) 1895ஆம் ஆண்டில் இந்தக் கதையை எழுதினார். இது அவருடைய மிகச் சிறந்த படைப்புக்களில் ஒன்றாகும். டாக்டரின் மகளான யூலியாவுக்கும் அலெக்ஸேய் லாப்தேவ் என்ற கோடீசுவர வணிகருக்கும் திருமணம் நடைபெறுகிறது. அது காதல் திருமணம் அல்ல. பாழான பணத்துக்காக நடந்த திருமணமும் அல்ல. லாப்தேவ் தன் இளம் மனைவியுடன் மாஸ்கோவுக்குப் போய் மூன்று வருடங்கள்தான் முடிந்திருக்கின்றன. ஆனால் இந்தக் குறுகிய காலத்துக்குள் லாப்தேவின் மனதில், தன் மனைவி யோடும் தன்னைச் சுற்றியுள்ள மற்றவர்களோடும் அவருடைய உறவுகளில் எவ்வளவு மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஆசிரியர் இந்தக் கதைக்குக் ‘குடும்ப வாழ்க்கைக் காட்சிகள்’ என்று துணைத் தலைப்புக் கொடுக்க விரும்பினார். ஆனால் ‘மூன்று ஆண்டுகள்’ என்ற இந்தக் கதை இன்னும் விரிவான முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கிறது. வலிமையான, இனிமையான மக்களைப் பற்றி, ஆனந்தமான, சுதந்திரமான காதலைப் பற்றி அந்தோன் சேகவின் அழியாக் கற்பனை இக்கதையில் பிரதிபலிக்கிறது.


சா
கு.ஜெயபிரகாஷ்
2019
ரூ.120
மரண விசாரம், வாழ்வின் பரிசீலனையாக விரிவு கொள்கிறது இப்பிரதியில். இத்தலைமுறைக்கான விழிப்புணர்வைத் தொற்ற வைக்கும் நம்பிக்கை நூலாகப் பரிமளிக்கிறது சாமந்திப்பூப் போல. இறந்தவர்களுக்கு அதிகமும் போடப்படும் காரணத்தால் சாமந்தி சாவின் பூவாக அடையாளம் காணப்படுகிறது. ஆனால் அது சாமந்தியின் தன்மையில்லையே. எல்லாப் பூவையும் போல அதுவும் மலர்ச்சிதான். சாவும் அப்படித்தான்.
சா.தேவதாஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *