Picasso-Bather

ஓடிக்கொண்டிருக்கும் என்னுடைய நதி

இலக்கியம்

வேல்கண்ணன்

நமக்கான கூடல்துளிகள் கொண்டு மழை உருவாக்குகிறேன்
மழை ஓயாமல் பொழிந்துகொண்டிருக்கிறது.
மலைகள், மரங்கள், கடல் என்று எல்லாமும்
மாமழை
பெருக்கெடுக்கும் நதி கரையில்
நின்றுகொண்டிருக்கிறேன்

காணும் நீங்கள்
உங்கள் ஊரில் ஓடிக்கொண்டிருந்த
நதியை நினைத்துக் கொள்கிறீர்கள்.
அந்த நொடியே
திருடிக் கொண்டதான குற்றச்சாட்டையும்
அதற்கு இந்த நதியே சாட்சி என்கிறீர்கள்.
மறுதலித்தவனை,
‘நானே உருவாக்கியது’ என்று பொய்யுரைத்ததாக முழுக்கடிக்கப்படுகிறேன்
என் நதி என்னைக் கொல்லவில்லை
மறுகரை ஏறியவுடன்  
முன் உடுத்திய பருத்தி ஆடை கொண்டு வானம் செய்கிறேன்
நிலமெங்கும் வானம் நிரப்பிக் கிடக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *