திருவள்ளுவர்

குறள்-53

திருக்குறள்

இல்வாழ்க்கைத் துணைநலம்

இல்லதென் இல்லவள் மாண்பானால்; உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை

இல்லவள் மாண்பு ஆனால் இல்லது என் – ஒருவனுக்கு இல்லாள் நற்குண நற்செய்கையள் ஆயினக்கால் இல்லாதது யாது? இல்லவள் மாணாக்கடை உள்ளது என் – அவள் அன்னள் அல்லாக்கால் உள்ளது யாது? (‘மாண்பு’ எனக்குணத்தின் பெயர் குணிமேல் நின்றது. இவை இரண்டு பாட்டானும் இல்வாழ்க்கைக்கு வேண்டுவது இல்லாளது மாட்சியே, பிற அல்ல என்பது கூறப்பட்டது.)

பரிமேலழகர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *