திருவள்ளுவர்

குறள்-57

திருக்குறள்

வாழ்க்கைத் துணைநலம்

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்குங் காப்பே தலை.

மகளிர் சிறைகாக்கும் காப்பு எவன் செய்யும் – மகளிரைத் தலைவர் சிறையால் காக்கும் காவல் என்ன பயனைச் செய்யும்? நிறை காக்கும் காப்பே தலை – அவர் தமது நிறையால் காக்கும் காவலே தலையாய காவல். (சிறை : மதிலும், வாயில்காவலும் முதலாயின. நிறை: நெஞ்சைக் கற்பு நெறியில் நிறுத்தல். காவல் இரண்டினும் நிறைக் காவல் இல்வழி ஏனைச் சிறைக்காவலால் பயன் இல்லை என்பார், ‘நிறைகாக்கும் காப்பே தலை’ என்றார். ஏகாரம் பிரிநிலைக் கண் வந்தது. இதனால் தற்காத்தற் சிறப்புக் கூறப்பட்டது.

பரிமேலழகர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *