மோதலாகிய சொற்கள்

இலக்கியம்

சப்னாஸ் ஹாசிம்

என்னைச் சுற்றியிருந்த
பசிய வனக்காடுகளும்
பட்சிகளும்
பின்னோக்கி
சரசரவென ஓடுகின்றன

புகைந்தடுக்கும்
அடி நெருப்பின்
அனல் காற்றில்
உதடுகள்
வெடித்து
எனக்கொரு
வயோதிகம் உண்டாகிறது

என் தோள்களில்
களைத்திருந்த
தேவதைகளுக்கு
நீண்ட வாயோரம்
இறக்கைகள்
முளைத்து விட்டன

என்னைப் புறந்தள்ளும்
வலயமொன்றை
கடுகதியில்
மோதி என்னைச்
சிதிலமாக்கும்
உசிதமொன்றை
எத்தணித்திருக்கிறார்கள்

மோதலில்
இச்சையவுருவங்களும்
என்பிடுக்குகளில்
வலியப் பற்றிய
அன்பு என்கிற
பிண்டமொன்றையும்
பின் நரம்பிலிருந்து
யாரும் உறிஞ்சவோ
உரியவோ முடியாது

நான் காதலுக்கு
பழகியதை
எனக்குள்
வெகுமறதியொன்றை
தர
முயற்சிக்க வேண்டாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *