அடவி

உள்ளடக்கம்

திரைமரணத்தின் பாதையில் மலரும் வாழ்வுசெல்லப்பாசிறுகதை நீலாஜீ. முருகன்கவிதை பச்சோந்திசிபிச்செல்வன் கட்டுரைசமூக ஜனநாயக அரசும் வெகுமக்கள் திரளினரும் அருண் நெடுஞ்செழியன்கதைமரம்சர்க்கஸ்ஜீ. முருகன்ஹேஸ் இளவரசியின் கதைஎய் தியோடோரோ ஒசாகிதமிழில்: ச. ஆறுமுகம்

மேலும்

மரணத்தின் பாதையில் மலரும் வாழ்வு

செல்லப்பா நம்மை எப்போதுமே ஏமாற்றாதவர் இயக்குநர் அப்பாஸ் கியரோஸ்தமி. இவருடைய படங்கள் ஏதாவது ஒரு வகையில் நமக்குப் பயன் தருபவையே. திரைப்படங்களில் வாழ்க்கையைத் தேடுபவர்களுக்கு அப்பாஸின் படங்களில் கிட்டும் அனுபவம் அலாதியானது. ஒரு திரைப்படத்தை இப்படியும் இயக்கலாம் என இவர் காட்டும் பாதை மாறுபட்டது; எளிதில் பிறரால் பின்பற்ற முடியாதது. வாழ்வு, சமூகம், இயற்கை, தத்துவம், தனது கலை ஆகிய வற்றின் மீது ஆழமான பிடிப்பு கொண்டிருப்பதால் இவரால் இதை அநாயாசமாக உருவாக்கிவிட முடிகிறது. எல்லாவற்றையும் எளிதில் […]

மேலும்

நீலா

ஜீ. முருகன் அந்த மாநகரத்தில் புதிதாக உருவாகியிருந்த மையப் பேருந்து நிலையத்தில் அவன் உட்கார்ந்திருந்தான். இப்போதே பேருந்தைப் பிடித்தால் பிற்பகலிலேயே வீடு போய்ச் சேர்ந்துவிடலாம். போய் என்ன செய்வது? இக்கேள்விதான் அவனை இங்கேயே உட்கார வைத்திருந்தது. இந்தப் பேருந்து நிலையம் அவனுக்குச் சௌகரியமான ஓர் உணர்வையேத் தந்தது. வட்ட வடிவில் பிரமாண்டக் கட்டமைப்பைக் கொண்டது அது. அதன் முழுமையைக் காண வெகுதூரம் நடக்க வேண்டும். அவ்வப்போது கேட்ட அறிவிப்பு களையும், பேருந்து களின் இரைச்சலையும், நடத்துநர்களின் விசில் […]

மேலும்

பச்சோந்தி கவிதைகள்

பச்சோந்தி கசாப்பு நிலம் தைப் பனியில் நடுங்கும் கருக்கலை எரிக்கிறது குப்பை மேட்டில் வாரிய காய்ந்த கொள்ளுச்செடிகள். எரியும் நெருப்பை ஆட்டுகிறது மாட்டுக்கறிக் காற்று. ஒரு குப்பையிலிருந்து சோளத்தட்டைகளும் மறு குப்பையிலிருந்து சாணி ஒட்டிய வைக்கோலும் பனியொழுகும் பச்சைப் புற்களோடு புழுகொத்தும் கோழி இறகும் கலந்தெரிகிறது. காற்றை இருளை வானை நிலத்தை எரித்த நெருப்பு மெல்ல மெல்ல நமந்து தணிகையில் மொத்தமாய் கொட்டப்படுகின்றன பாழான குடிசையின் கிடுகுகள். அதில் குளிர்காய்கிறது மனுசக்கறி மிதக்கும் நவீனக் காற்று இரத்தம் […]

மேலும்

சிபிச்செல்வன் கவிதைகள்

சிபிச்செல்வன் நீலவானம் மற்றும் … நீல நிறத்தில் ஒரு வானம் பார்த்தேன் அது எங்கள் வானத்தின் நிறம் என நினைத்திருந்தேன் கொஞ்ச நாட்களுக்குமுன் நான் பயணித்து சேர்ந்த ஊரில் கண்டேன் அதே வானம் இருந்தது அந்த வானத்திலும் நீலம் இருந்தது இன்னும் கொஞ்ச நாட்களுக்குப்பின் வேறோரு நாட்டிற்குப் போயிருந்தபோது பார்த்தேன் அங்கே வானில் ஒரு நிலவும் இருந்தது அப்போதும் வானில் நீலம் கொஞ்சம் பின்னணியில் இருப்பதையும் ஒளியில் கொஞ்சம் பிசிறடித்திருப்பதையும் கண்டேன் ஆக எல்லா வானங்களும் ஒன்று […]

மேலும்

சமூக ஜனநாயக அரசும் வெகுமக்கள் திரளினரும்

அருண் நெடுஞ்செழியன் செல்லாக்காசு அறிவிப்பு அது ஏற்படுத்திய சொல்லொணாத் துயரங்கள், மரணங்கள் ஏன் மத்திய அரசுக்கு எதிரான வெகுமக்களின் கிளர்ச்சிகர போராட்டமாக வெடிக்கவில்லை? வெகுமக்கள் ஆட்டு மந்தைகளாக மாறிவிட்டனரே? இன்னுமா இந்த அரசை மக்கள் நம்புகின்றனர்? போன்ற எண்ணற்ற ஆவேசக் குமுறல்களைக் கேட்டு வருகிறோம். இடதுசாரி முகாம்களிலிருந்து இவ்வகையான ஆவேசக் குரல்கள் சற்றுத் தூக்கலாகவே வருகிறது! ஆக,வெகுமக்கள் ஆளும் அரசை மூடபக்தியுடன் வழிபட்டு ஆதர வளிப்பதற்கான காரணம்தான் என்ன? செல்லாக்காசு அறிவிப்பும் அதையொட்டிய அனுசரணை நிலைமையை முன்வைத்து […]

மேலும்

ஹேஸ் இளவரசியின் கதை

எய் தியோடோரோ ஒசாகி தமிழில்: ச. ஆறுமுகம் அநேகம் ஆண்டுகளுக்கு முன்னால் ஜப்பானின் புராதனத் தலைநகரான நாராவில் டொயொ நாரி ஃப்யூஜிவாரா என்னும் பெயரில் இளவரசர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் மிகுந்த அறிவாளி. அரசவையில் மாநில அமைச்சராகவும் இருந்தார். அவரது அழகிய மனைவி இளவரசி முரசாகி (வயலெட்) இனிய பண்புகள் நிறைந்த மிகமிக நல்ல பெண்ணாக இருந்தார். அவர்கள் இருவருக்கும் இளமையிலேயே ஜப்பானிய வழக்கப்படி இரு குடும்பத்தாராலும் திருமணம் செய்விக்கப்பட்டது. அந்நாளிலிருந்து அவர்கள் இருவரும் மிகுந்த […]

மேலும்

சர்க்கஸ்

ஜீ. முருகன் நிலவின் ஒளியில் காடு பிரகாசமாக இருந் தது. ஆடி மாதத்தின் தொடக்கமாதலால் காற்றின் வேகம் அதிகம் தான். அதனால் இலைகளின் ஓயாத சப்தம் பெரும் இசையென முழங்கிக்கொண்டிருந்தது. சமீபத்தில் பெய்த மழையினால் பாறைகளுக்கிடையில் சலசலத்து இறங்கிக்கொண்டிருந்தன ஓடைகள். ஒரு பாறையின் மேல், தன் கதகதப்பில் படுத்திருந்த குட்டிக்கு கதைசொல்லிக்கொண்டிருந்தது தாய்மான். ‘முன்னொரு காலத்தில…’, ‘ஒரு காட்டுல…’, ‘ஒரு நாட்டுல…’ எனத் தொடங்கும் கதைகள்தான். வால் அறுந்த ஒரு குரங்கின் கதை, புள்ளப்பூச்சியை விழுங்கிவிட்ட பாம்பின் கதை, […]

மேலும்
அடவி

அடவி-20

உள்ளடக்கம் தாயார் காட்சி வண்ணநிலவன் நேர்காணல் ஜீ.முருகன் சக்தி அழைப்பு குமாரநந்தன் ராஜபக்சவுடன் நட்பு பாராட்டுதல் இளவேனில் பிளவு கார்த்திகைப் பாண்டியன் மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் பழிதீர்ப்பு போர்த்துகீசியம்: ஜோஸ் சரமாகோ தமிழில்: ச. ஆறுமுகம் முகவரி முழுமையற்று இருந்த போதிலும்… ஜி.என்.பணிக்கர், தமிழில்: தி.இரா.மீனா மொழிபெயர்ப்புச் கவிதை மைக்கேல் ஒன்யாட்டே கவிதைகள் தமிழில்: பிரம்மராஜன் பலகை

மேலும்
Srinivasan Natarajan

சக்தி அழைப்பு

குமாரநந்தன் அன்று விடியற்காலை காளியண்ணன் ஒரு கனவு கண்டார். இளவயது பெண் ஒருத்தி மனதைப் பிசையும்படியான மெல்லிய குரலில் அழுதுகொண்டிருந்தாள். அவள் முகத்தில் இவரின் பாட்டி ஜாடை இருந்தது. இவருக்கும் அழுகை வந்தது. கனவிலேயும் கனவுக்கு வெளியேயும் அவர் கண்கள் கலங்கின. தாயி உன் பிரச்சினை என்ன என்று கேட்டார். வீடு இடிஞ்சி விழற மாதிரி இருக்கு. அதிலேயேதான் ரொம்ப வருஷமா இருக்கேன். வீட்ட எடுத்துக் கட்டினா பரவாயில்ல என்றாள். அவ்வளவு தானேம்மா. இதுக்குப் போயி யாராவது […]

மேலும்