Serusier_-_boys_on_a_river_bank_Louis Paul Henri Sérusier

பழிதீர்ப்பு

போர்த்துகீசியம்: ஜோஸ் சரமாகோ ஆங்கிலம்: ஜியோவான்னி போன்டீரோ தமிழில்: ச. ஆறுமுகம் அந்த இளைஞன் ஆற்றுக்குள்ளிருந்து வந்துகொண்டிருந்தான். வெற்றுக்கால்கள்; முழுநீளக்காற்சட்டை மூட்டுக்கு மேலாக ஏறிச் சுருண்டிருக்க, கால் முழுவதும் சேறு அப்பியிருந்தது; முன்பக்கம் திறந்திருந்த சிவப்புச் சட்டை அணிந்திருந்தான். அவன் மார்பிலிருந்த பருவ வயதுப் பூனைமுடி கருக்கத் தொடங்கியிருந்தது. அவனது அடர்கறுப்புத் தலைமுடியை ஈரமாக்கிய வியர்வை, அவனது மெலிந்து நீண்ட கழுத்துக்கும் கீழாக வழிந்து கொண்டிருந்தது. நீண்ட துடுப்புகளின் கனத்தால், அவன் முன்பக்கமாகச் சிறிது குனிந்து வளைந்திருந்தான்; துடுப்புகளின் […]

மேலும்
Arab_horses_fighting_in_a_stable_Eugene_Delacroix

மைக்கேல் ஒன்யாட்டே கவிதைகள்

தமிழில்: பிரம்மராஜன் கையொப்பம் கார் அவனைச் சுமந்து சென்றது மரங்களுக்கிடையே ஒரு வெண்ணிறப்பறவையென அடித்துக்கொண்ட நிலாவுடன் போட்டியிட்டு. உங்கள் குடல்வாலைச் சுற்றி வார்த்தைகளைப் பாட வைப்பது கடினமான காரியம். வெளிப்படையானது என்னை எரிச்சலடையச் செய்கிறது ஒவ்வொருவருக்கும் தழும்புகள் இருக்கின்றன அவை நீச்சல் உடையில் அரைக்கால்சட்டைகளின் மர்மத்தினுள் ஊர்ந்து மறைகின்றன. நான்தான் என் குடும்பத்தின் முதல் குடல்வால் ஒரு விநோத ரத்தவகையின் அவதூறு அளிக்கப்பட்ட என் சகோதரன் பின்னர் வயிற்றுப் புண்கள் மட்டுமே இருப்பது நிரூபிக்கப்பட்டான். நான் மருத்துவமனையை […]

மேலும்

முகவரி முழுமையற்று இருந்த போதிலும்…

ஜி.என்.பணிக்கர் தமிழில்: தி.இரா.மீனா அவள் வேலைக்கு வந்து சேர்ந்த தினத்தன்று, அலுவலகத்தின் மரப்பலகை நடைபாதையைக் கடந்த போது வினோதமான ஓர் அறிவிப்பு பலகையைப் பார்க்க நேர்ந்தது: ‘முழுமையான முகவரிகளற்ற கடிதங்கள்’ என்று. ஆர்வத்தோடு அவள் அந்தப் பலகையைப் பார்த் தாள். இல்லை. கடிதங்கள் எதுவும் அங்கில்லை. ஒவ்வொருவருக்கும் தனக் கெனச் சொந்தமான முழு முகவரி இருக்கும்.அவர்கள் எல்லோரும் உறுதியான முகவரி உடைய மனிதர்கள்!சமூகத்தில் முக்கியமானவர்கள் என்று அவர் நினைக்கும் மனிதர்கள் பற்றி அப்பா பேசுவதை அவள் அடிக்கடி […]

மேலும்
Srinivasan

ராஜபக்சவுடன் நட்பு பாராட்டுதல்

இளவேனில் சுகத் ராஜபக்சவை முதன்முதலாக சந்தித்தபோது அவனுடன் பேசுவதற்கான விருப்பம் இவனிடத்தில் தோன்றாமல் போனதற்கு முழு முதற்காரணமாக இருந்தது ராஜபக்சவுடன் வந்திருந்த மிக அழகான இரு சிங்களப் பெண்கள்தான் எனும் உண்மையை இவன் யாரிடத்திலும் எந்தக் காலத்திலும் சொல்லியது கிடையாது. அதற்கான தேவையும் எப்போதும் தோன்றியதில்லை. காரணம் சுகத் ராஜபக்சவுடனான இவன் நட்பு ஈசலின் வயதினை விடப் பத்து மணிநேரம் குறைவானது. காலை ஒன்பது மணிக்கு அறிமுகமாகி, மதியம் ஒரு மணிக்கு ஒன்றாகப் புகைப்பிடித்து, மாலை ஆறு […]

மேலும்
Srinivasan

பிளவு

கார்த்திகைப் பாண்டியன் உயரமாய் நின்றிருந்த மரத்தேரின் சக்கரங்கள் இறந்த காலத்தில் உறைந்திருந்தன. செங்குத்தான சூரியனின் கிரணங்கள் வீதியைச் சுட்டெரிக்க தேரின் நிழல் அகல மான அதன் அடிபாகத்தின் கீழ் ஒளிந்து கிடந்தது. உடலில் வழிந்தோடும் வியர்வையைத் துடைத்தபடி ஒரு கடையின் முன்னால் வேய்ந்திருந்த ஓலைக்கொட்டகையின் கீழ் ஒதுங்கினேன். கூரையினுடைய சல்லடைக்கண்களின் வழி உள்ளே நுழைந்த ஒளி, முகத்தில் வெதுவெதுப்பாய் விழுந்து கண்கள் கூசியது. தலையைத் தாழ்த்தி பாக்கெட்டில் இருந்த சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தேன். மட்டரக சிகரெட்டின் […]

மேலும்

பலகை

சுப்பிரமணி இரமேஷ் நான்காவது கோணம் மாத இதழ் (ஜனவரி 2017) தொடர்புக்கு:8056039893 ரூ.20 சிறுபான்மையினர், தலித்துகள், பெண்கள், மூன்றாம் பாலினத்தோர், உதிரிகள் என புறக்கணிக்கப்பட்டவர்களின் கருத்துக்களைக் கவனப்படுத்த வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் தமிழுக்கு மேலும் ஒரு புதிய சிற்றிதழாக வெளிவந்திருக்கிறது நான்காவது கோணம். மூத்த எழுத்தாளர்களுக்கும் புதி தாக எழுத வந்திருக்கும் இளம் படைப்பாளிகளுக்கும் தகுந்த வெளிகளை இவ்விதழ் ஏற்படுத்தித்தரும் என்ற அறிவிப்பும் வர வேற்கத்தகுந்தவை.இதழில் ரவிக்குமாரின் தலித் அரசியல் கவிதைகள் இதழிற்கு நல்லதொரு தொடக் […]

மேலும்

நேர்காணல்

ஜீ.முருகன் நாங்கள் கேன்டீனில் எதிரெதிரே அமர்ந்திருந்தோம். எங்களுக்கு முன் அருந்தி முடித்திருந்த காப்பி டம்ளர்கள் இருந்தன.“உங்க சொந்த ஊரும் சிவகிரிதான்” அவர் சொன்னார். “அது இப்போ சீரழிஞ்சி போச்சி. ஆன்மிக ஸ்தலமாக இருந்த ஊர் இப்போ வியாபார ஸ்தலமாயிடுச்சி…”என்னுடை கருத்துகளை அவர் எதிர்க்கப்போகிறாரா வரவேற்கப் போகிறாரா எனத் தெரியவில்லை. ஆனால் எனக்கு அனுகூலமான ஏதோ ஒன்று நிகழ்ந்துகொண்டிருந்தது. சிவகிரி செய்தியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வில் தேர்வாகி இருந்த நான் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டிருந்தேன். நேர்காணல் நடத்திய செய்தி ஆசிரியரின் […]

மேலும்

தாயார் காட்சி

வண்ணநிலவன் கேசவ ஐயங்காருக்கு வியர்த்துக்கொட்டியது. இன்னும் எழுபது படிகளாவது ஏற வேண்டும். வெயில்கூட அவ்வளவு அதிகமில்லை. ஆனாலும், அவருக்கு வியர்த்தது. படிக்கட்டின் வலதுபுறச் சுவர்மீது காகங்கள் வரிசையாக உட்கார்ந்திருந்தன. அது ஒன்றும் பெரிய மலையில்லை. மொத்தமே நூற்றி இருபத்திரண்டு படிகள்தான். படிகளும் செங்குத்தாக இல்லை. கோயிலை நெருங்குகிற இடத்தில் மட்டும் ஒரு ஏழெட்டுப் படிகள் செங்குத்தாக இருக்கும். ஒரு காலத்தில் அவருக்கு அடிவாரத்திலிருந்து மேலே போக ஐந்து நிமிடம்கூட ஆகாது. அடிவாரத்தில் கோயில் படிக்கட்டு ஆரம்பிக்கிற இடத்தில் […]

மேலும்
Paakirathiyin Mathiyam

காதலும் போராட்டமும் கலையும்

மு.குலசேகரன் பா.வெங்கடேசன் எழுதிய பாகீரதியின் மதியம் என்னும் இந்த நாவல் 1974ஆம் ஆண்டு மதியம் என்ற சிறு பொழுதில் தொடங்கி 1975, 76, 68, 37, 48, 65 என்று முன்பின்னாக நகர்ந்து நீண்ட காலமாக மாறுகிறது. அதேபோல் திலகர் திடல் என்னும் ஓர் இடத்தில் ஆரம் பித்து மதுரை, ஒசூர், காருகுறிச்சி, திருச்சி, திருவனந்த புரம், கல்கத்தா, பேராச்சாப்பா என்று நாட்டின் முழு நிலப்பரப்பாகவும் விரிகிறது. முதலில் வாசுதேவனும் உறங்காப்புலியும் ஒருவரையொருவர் சந்தித்து மோதிக் கொள்கிறார்கள். […]

மேலும்

ஆகாசமுத்து கவிதைகள்

வயிற்றோடு ஓர் எளிய போதக் கத்தி நேற்றிரவும் அப்படித்தான் திடீர் அதிர்ச்சியோடு எழுந்தேன். அறம்சார் குற்றவுணர்வு தட்டியெழுப்பிவிட்டது. புதிய வரவாய் ஒரு கொடு நாகப்படம் தினசரி நாட்காட்டித்தாளாய் அரிசி மூட்டைக்குக்கீழே படபடத்துக்கொண்டிருந்தது. இன்னும் ஒட்டுரக நாவல்பழம் வாங்கி வந்த பாலித்தீனும், மிக்சர் மடித்த காகிதமும் தரையோடு உரசி மேலெழும்பிகொண்டிருந்தன. மிருக வேட்டைக்காரனைப்போல ஒவ்வொன்றாய் கசக்கி எறிந்தேன். பிறகு அடுத்தநாள் பணிநிமித்தங்களின் பட்டியலை ஒரு தாலாட்டைப்போல பாடிநடித்து என்னை உறங்கச் செய்தாய். உன் கூச்சல் இல்லையென்றால் வெளியே செல்வானேன். […]

மேலும்