இயல்பு

இந்தியத் தத்துவங்களில் இயற்கையும் மனிதரும் சூழலும்

க.காமராசன் ஏன் இந்தத் தொடர்?இந்தியத் தத்துவங்களில் இயற்கையும் மனிதரும் சூழலும் என்னும் தலைப்பில் ‘இயல்பு’ முதல் இதழிலிருந்து ஒரு தொடர் கட்டுரை எழுத வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்திய போது அனைவரும் வரவேற்றனர். அவர்கள் இந்தத் தொடரின் நோக்கமாக இருக்க வேண்டிய பல விசயங்களை என்னுடன் பகிர்ந்துகொண்டனர். அவற்றை ஒன்று திரட்டி ஏற்கனவே நான் யோசித்திருந்த பல விசயங்களையும் சேர்த்து, இந்தத் தொடருக்கான பின்வரும் நோக்கத்தைக் குறித்துக்கொள்கிறேன்.நோக்கத்தைக் குறிப்பிடும் முன் ஒன்றைக்கூற வேண்டும். அண்மைக் காலத்தில் நான் […]

மேலும்
இயல்பு

சூழலியத்துக்கு ஒரு சோசலிசக் கொள்கை அறிக்கை

Joel Kovel, Michael Lowy (செப்டம்பர், 2001)தமிழில்: சாமி 21ஆம் நூற்றாண்டு எரிமலை மீது நிற்கிறது! இதுவரை இல்லாத அளவுக்கு நமது உயிர்ச்சூழல் உருக்குலைந்து போயுள்ளது. பேரச்சமும், பெருங்குழப்பமும் இப்புவிக்கோளத்தை பிடித்தாட்டிக்கொண்டிருக்கின்றன! உடலில் பரவும் அழுகல் நோயாய் உலகின் பெரும் பகுதியில் – மத்திய ஆப்பிரிக்கா, மத்தியக்கிழக்கு, தென்னமெரிக்காவின் வடமேற்குப் பகுதி ஆகியனவற்றில் – நடந்துவரும் குறைந்த அளவிலான, ஆனால் கொடூரமான, போர்த் தாக்குதல்கள் எல்லா தேசங்களையும் உலுக்கிக்கொண்டிருக்கின்றன. சூழலுக்கு நேர்ந்துள்ள நெருக்கடிக்கும், சமூகச் சிதைவுக்கும் இடையிலான […]

மேலும்
இயல்பு

புவிக்கோளின் சூழலியச் சிக்கல்கள்

ஜான் பெல்லாமி பாஸ்டர், மேக்டாப் தமிழில்: அருண் நெடுஞ்செழியன் “இயற்கையின் மீது மனித வெற்றிகளை வைத்துக் கொண்டு நம்மை நாம் அளவு கடந்து தற்புகழ்ச்சி செய்துகொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் இப்படிப்பட்ட வெற்றி ஒவ்வொன்றுக்கும் இயற்கை நம்மைப் பழி வாங்குகிறது. ஒவ்வொரு வெற்றியும் முதலில் நாம் எதிர்பார்க்கின்ற விளைவுகளை நிகழ்த்துகிறது என்பது உண்மையேயாயினும் இரண்டாவது மூன்றாவது நிலைகளில் நாம் எதிர்பார்க்காத,முற்றிலும் வேறுட்ட விளைவுகளைத் தந்து, பல தடவைகளிலும் முதலில் சொன்னதை ரத்து செய்துவிடுகின்றன. எங்கல்ஸ் சுற்றுச்சூழல் சீரழிவென்பது தற்போதைய […]

மேலும்
இயல்பு

உற்பத்திக் குறைப்பை, முதலாளித்துவ வளர்ச்சிக்கு எதிரான போராட்டங்களுடன் சோசலிசவாதிகள் எவ்விதம் தொடர்புபடுத்துவது எப்படி?

டான் ஃபிட்ஸ் தமிழில்: நிழல்வண்ணன் முதலாளித்துவ சமுதாயத்திற்குள் உற்பத்தியைக் குறைப்பதை நாம் ஆதரிக்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதல்ல கேள்வி: அதைவிட, ஏற்கனவே நடந்து கொண்டிருக்கிற போராட்டங்களுடன் நம் எப்படி சிறப்பாகத் தொடர்புபடுத்துவது என்பதுதான் கேள்வியாகும். மனித இனம் உயிர் பிழைத்திருப்பதை அச்சுறுத்துகிற பொருளாதார விரிவாக்கத்தின் கட்டுப்படுத்தவியலாத இயங்காற்றலை உலகெங்கும் உள்ள செயல்வீரர்கள் எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த முயற்சிகளை ஒன்றாக இணைக்கக் கூடிய ஒரு புதிய சமுதாயம் பற்றிய ஓர் சித்திரத்தை வழங்குவது இப்போதைவிட எப்போதும் மிகவும் […]

மேலும்
இயல்பு

மார்க்சியமும் சூழலியமும்

தோழர் மு.வசந்தகுமாருடன் நேர்காணல் ‘திராவிட இயக்கக் கலாச்சாரம்’, ‘பாரதிதாசன் ஒரு வரலாற்றுத் தேவை’, ‘மார்க்சியம்: மறைத்தலும், திரித்தலும்’ ஆகிய நூல்களின் ஆசிரியர். இவற்றில் ‘திராவிட இயக்கக் கலாச்சாரம்’, ‘பாரதிதாசன் ஒரு வரலாற்றுத் தேவை’ ஆகிய இரு நூல்களும் 1980களின் மத்தியில் ‘மன ஓசை’ இதழில் முதலில் தொடர்களாக வந்து பிறகு நூல்களாக வெளிவந்தன. மேலும் ஆங்கிலத்திலிருந்து தமிழில் இவருடைய மொழியாக்கங்களாகப் பின்வரும் நூல்கள் வெளிவந்துள்ளன. ‘தத்துவம்-பேக்கன் முதல் மார்க்ஸ் வரை’, ‘முதலாளியத்தின் கோர வடிவங்கள்’, ‘சீனாவும் சோசலிசமும்’, […]

மேலும்
இயல்பு

இயல்பு ஏன்?

இயற்கை வரலாறு, அதன் தொடர்ச்சியான சமூக வரலாறு ஆகியவற்றுக்கு இடையிலான இயைபு-முரண்-இயைபு என்ற சூழல்போக்கே மனித சமூகத்தின் உயிர்ப்பிழைப்புச் சாரம் ஆகும். இயற்கையிலிருந்து தம்மை வேறுபடுத்திக் கொண்டு நின்று, இயற்கையை உணர்வுநிலையோடு மனித உயிர் தன்வயமாக்கத் தொடங்கியது. மனித உயிரின் இயற்கைத் தன்வயமாக்கல் என்பது தம் உயிர் வாழ்த் தேவைக்காகவும் சமூக வாழ்த் தேவைக்காகவும் இயற்கையிலிருந்து தேவையானவற்றை பெற்றுக் கொள்ளல் ஆகும்.உயிரின் விலங்கு நிலையிலிருந்து மனித நிலையை வேறுபடுத்திக் காட்டும் பண்பு உழைப்பு – அதாவது உணர்வுநிலையோடு […]

மேலும்