ஜீனத் கவிதைகள்
வேதனை குறைத்த தொழுகைகள் என்றோ மரணித்திருந்தாள் பட்டுப்புழுக்களாலான ஆடையைப் போர்த்தி மீளா உறக்கத்தில் ஆழ்ந்திருந்தவள் பணியேற்றுப் புலம் நீங்கிப்போன கணவனின் நினைவுகளில் நித்தமும் ஓட்டுக்குள் அடங்கும் நத்தையாய் பதினாண்டுத் தனிமையில் தொலைத்த இளமையை மீட்கவொண்ணா வாசனைத் திரவியங்களின் நெடி வைபவங்களின் மகழ்வில் உற்றோரைக் காண்பதற்கும் திறக்கவேண்டிய வாயிற்கதவின் சாவியை கைக்கொண்டவனின் தொலைபேசி அழைப்பொலிகள் இடிப்புரைகளுக்கிடையிலும் மாறிடாது முகமலர்ந்த விருந்தோம்பல்கள் சோகங்களைக் குவித்த மையத்திலடர்ந்த புற்றாய்ப் பரவிய நோய்மையின் வேதனை குறைத்த தொழுகைகள் சுவாசம் நீத்த இறுதிக் குளியலில் […]
மேலும்