ரெய்னர் மரியா ரில்கே

ரெய்னர் மரியா ரில்கே கவிதைகள்

தமிழில் : சரோ லாமா 1] தொடங்குதல் நீங்கள் யாராக இருந்தாலும் சரி,மாலையில் உங்களுக்குப் பழக்கமானவீட்டை விட்டு வெளியே செல்லுங்கள் நீங்கள் யாராக இருந்தாலும் சரி,உங்கள் வீடுமுடிவிலிக்கு அருகாமையில் இருக்கிறது.பிறகு உங்கள் கண்கள்விரிசலுற்ற வாசற்படியின்நிலைக்கல்லைத் தாண்டிஅபூர்வத்தை அணிந்துகொள்ளும்பலம் குன்றிய நீங்கள்தனி ஒரு ஆளாகநிழல் பொருந்திய மரத்தைமெதுவாகமேலே உயர்த்துவீர்கள்வானத்தின் உயரத்திற்கு. நீங்கள் ஒரு உலகத்தை சிருஷ்டிப்பீர்கள்அது வளர்ந்து முதிர்ந்துபேசப்படாத பக்குவமடைந்த சொல்லாக மாறும்.நீங்கள் உங்கள் சுய முயற்சியால்அந்த வார்த்தையின் அர்த்தத்தை விளங்கிக்கொண்டீர்களானால்மேலும் நுட்பமாக உங்கள் பார்வை விசாலமடைந்துஉங்களை தாண்டிச் […]

மேலும்
விளாடிமிர் மாயகோவ்ஸ்கி

விளாடிமிர் மாயகோவ்ஸ்கி

தமிழில்: சரோ லாமா 1]ஒழுங்குகெட்ட இந்த உலகத்தின் மீது உணர்ச்சிப் பெருக்குடன்ஓவியக் கித்தானிலிருந்து வண்ணங்களை வாரி இறைத்தேன்ஜெல்லி மீனின்மீது ஓரத்தில் மினுங்கும் கடலின் கன்னக்கதுப்பை விரல்களால் துழாவினேன்வெள்ளிபோல் மினுங்கும் சால்மன் மீனின் இருப்பை மீறிஓசை இல்லாவிட்டாலும் உதடுகளின் அசைவை அவதானித்தேன்என் நண்பனே,சாக்கடையயோரம் கிடந்த புல்லாங்குழலை எடுத்துஅந்தியை வாசித்தது நீ தானா? 2]அந்தக் குதிரை, ஒட்டகத்தைப் பார்த்துகேலியான குரலில் சொல்லிச் சிரித்தது: ”வெறுமனே உயர்ந்த குறும்பான குதிரை.” ஒட்டகம் பதில் அளித்தது:”நீ குதிரையா, வாய்ப்பேயில்லைநீ ஒரு குறை வளர்ச்சியுடைய […]

மேலும்

அசோகமித்திரன்- அன்றாட வாழ்வின் மென்நையாண்டித்துவம்

விருட்சன் Forgetfulness of suffering and love Though paid by life What more could be  desired?              Anna Akhmatova அசோகமித்திரனைத் தொடர்ச்சியாக வாசித்துவரும் வாசகர்களால் அவருடைய எழுத்தின் அடிசரடில் ஓடும் பகடியைக் கண்டுகொள்ள முடியும். இது அவருடைய சுபாவத்தின் ஒரு பகுதியாக இருக்கக்கூடும் என்றே கருதுகிறேன். (நான் அவரை ஒருமுறை கூட சந்தித்து பேசியது இல்லை) ஒருவேளை அவருடைய இத்தன்மையை அவருடன் நேரில் உரையாடியவர்கள் கண்டுகொண்டிருக்கலாம். பொதுவாக அவருடைய எழுத்துக்களில் இந்த […]

மேலும்
கினோ

கினோ எனும் தனித்து அலைபவர்கள்

விருட்சன் என்னிடம் ஹாருகி முராகாமியின் சிறுகதை தொகுப்பொன்றை கொடுத்து இப்புத்தகத்தை கன்னி கழியாமல் கொடுத்துவிடுங்களென்று நண்பர் ராணி திலக் சொன்னபொழுது கொஞ்சம் ஏமாற்றமாகவும் தவிப்பாகவும் இருந்தது. ஏனெனில் இயற்கையில் நான் ஒரு போகி என் ஒரு புத்தகம் கூட கைவைக்கப்படாமல் அடிக்கோடிடாமல் இருக்காது. முதன் முதலாக வெறும் கைகளால் மட்டுமே தடவி தடவி பார்த்தபடியும் டைரியில் குறிப்பெடுத்தபடியும் பெருமூச்சுடன் படித்தேனென்றால் அது இக்கதை தொகுப்புதான். ஒரு சில கதைகளைப் படித்து முடித்தவுடனேயே கதைகளின் அமைப்பும் அதன் உள்சரடும் […]

மேலும்

சிறகுகள்

கோ.புண்ணியவான் அது ஒரு துர்ச் சம்பவம். தப்பிக்கவே முடியாத ஒரு மாயவலைக்குள் விழுந்து சிக்கிக் கொண்டது போல முடிந்துவிட்டிருந்தது . எல்லாம் கொண்டாட்ட கதியில்  நகர்ந்து கொண்டிருந்த தருணத்தில்ஓர்ஊழிப் பெரும் கொடுக்குப் பிடியில் இறுக்கப்பட்டுவிடுவோமென்று மதி எதிர்பார்க்கவில்லை. தேனிலவின் மூன்றாவது நாளில் நீர்வீழ்ச்சியில் குளிக்கப் போனபோது ஒரு மூன்று நான்கடி உயரத்திலிருந்து குதூலத்தோடு பாய்ந்தவர் குப்புற விழுந்து நீரிலிருந்து சில நிமிடங்கள் எழாதிருக்க, பதறி ஓடிப்போய் தூக்கும்போதுதான் தெரிந்தது ரமேஷ் நினைவற்றும், மூச்சுப் பேச்சற்றும், கைகால் அசைவற்றும் […]

மேலும்

காடு காணாமல் போச்சு

வட்டக்கச்சி வினோத் எங்கள் காடு காணாமல் போச்சுஅமேசான் பற்றியே ஊரெங்கும் பேச்சுபக்கத்தில் நடப்பது தெரியாமல் இருக்குஎட்டத்தில் எரிந்தால் எரியுது மனது ஆற்றில் மணல் காணாமல் போச்சுகாட்டின் மரங்கள் ஏலத்தில் போச்சுபருவத்தில் மழை வராமல் போச்சுவந்தால் வெள்ளம் தலைக்குமேல் போச்சுஅப்போது இந்தப் பேச்சு எங்கையா போச்சு நீண்ட சாலையில் குடை தந்த மரம்மூச்சடங்கி வீழ்ந்த கதைஆற்றங்கரையில் போட்ட தூண்டில்அள்ளிய மீன்கள் இல்லைகறுத்த வானம் இடிக்கும் நேரம்வெளுத்த காளான் பூப்பதும் இல்லைகடற்கரை ஓரம் சங்குகள் பாடும்கீதம் இல்லைஇவையெல்லாம் இந்தக் காலத்தின்இளமையின் […]

மேலும்
Picasso-Bather

ஓடிக்கொண்டிருக்கும் என்னுடைய நதி

வேல்கண்ணன் நமக்கான கூடல்துளிகள் கொண்டு மழை உருவாக்குகிறேன்மழை ஓயாமல் பொழிந்துகொண்டிருக்கிறது.மலைகள், மரங்கள், கடல் என்று எல்லாமும்மாமழைபெருக்கெடுக்கும் நதி கரையில்நின்றுகொண்டிருக்கிறேன் காணும் நீங்கள்உங்கள் ஊரில் ஓடிக்கொண்டிருந்த நதியை நினைத்துக் கொள்கிறீர்கள்.அந்த நொடியேதிருடிக் கொண்டதான குற்றச்சாட்டையும் அதற்கு இந்த நதியே சாட்சி என்கிறீர்கள்.மறுதலித்தவனை,‘நானே உருவாக்கியது’ என்று பொய்யுரைத்ததாக முழுக்கடிக்கப்படுகிறேன்என் நதி என்னைக் கொல்லவில்லைமறுகரை ஏறியவுடன்  முன் உடுத்திய பருத்தி ஆடை கொண்டு வானம் செய்கிறேன்நிலமெங்கும் வானம் நிரப்பிக் கிடக்கிறது.

மேலும்
ஜா, தீபா

நீலம் பூக்கும் திருமடம் – ஜா.தீபா

சுப்பிரமணி இரமேஷ் கதையைப் புனைவதில் தேர்ந்தவர்களாகப் பெண்களே தொடக்க காலத்தில் இருந்திருக்கிறார்கள். கதைசொல்லும் மரபு, அச்சு ஊடகத்தின் தொடர்ச்சியாகச் சிறுகதையெனும் நவீன வடிவத்தைக் கைப்பற்றும்போது பெண்களின் இடம் தளர்ச்சியடைந்திருக்கிறது. நவீன இலக்கியத்தில் கவிதையில்தான் பெண்களின் பங்களிப்புக் குறிப்பிடும்படியாக இருக்கிறது. கதைகளால் நிரம்பியவர்கள் கவிதையை வரித்துக்கொண்டது எப்படி நேர்ந்ததெனத் தெரியவில்லை. புனைகதைகளில் சிரத்தையானப் பங்களிப்பைச் செய்தவர்களை எண்ணிவிடலாம். இரண்டாயிரத்திற்குப் பிறகுதான் கவிதையெழுதியப் பெண்கள் பலர் கதையெழுதத் தொடங்கியிருக்கிறார்கள். நம்பிக்கை தரும் பல படைப்பாளிகள் இக்கால கட்டத்தில் உருவாகியிருக்கிறார்கள். அதில் […]

மேலும்