எம்.வி.வியும் நானும்

இராம. குருநாதன் 1994. ஒரு பகல்வேளையில் குடந்தை பஞ்சாமி அய்யர் உணவகத்தில் இருந்து எழுத்தாளர் விட்டல்ராவ்  உணவு உண்டுவிட்டு வெளியே வரும்போது என்னைப் பார்த்ததும், ”சென்னையிலிருந்து எப்போது வந்தீர்கள்” என்று என்னைக் கேட்டார். ”எனக்குச் சொந்த ஊர் இதுதானே” என்றேன். ”சரி இப்போ எங்க போறதா இருக்கீங்க” என்றேன். ”தோப்புத்தெருவுக்குப் போகணும். வழி தெரியலே” என்றார். ”நான் உடனே எம்.வி.வி சாரைப் பார்க்கப் போறிங்களா” என்றேன்.  சரியான கோடைக்காலம். அக்னி நட்சத்திர சமயம்.  வெய்யில் கொளுத்தியது. நானும் […]

மேலும்

கவர்ச்சி

எம். வி. வேங்கடராமன் மாயை பல உருவத்தில் வடிவெடுத்து ஆனந்தம் பெறாமல் தடை செய்கிறது. அதை துணிந்து மற்றவர்கள் பாக்கியவான்கள். நினைக்கிறேன்; ஏனென்றால் நான் நினைக்க வைக்கப்படுகிறேன். சொல்லுகிறேன்;  ஏனென்றால் நான் சொல்ல வைக்கப்படுகிறேன். செய்கிறேன்;  ஏனென்றால் நான் செய்ய வைக்கப்படுகிறேன். என்னால் எவ்வளவு அழகாய் நினைக்கப்படுகிறது! அந்த இரவின் பிற்பகுதியில் என் தூக்கம் கலைந்தது.   தூங்கப்போகும் முன் என் மனதில் ‘ஏதோ வருகிறது, ஏதோ வருகிறது’ என்னும் ஒரு  நினைவு வலுவாக இருந்தது.  என்ன வரும்,  […]

மேலும்
எம்.வி.வெங்கட்ராம்

வேள்வித்தீ நாவல் இடங்களில் ஒரு யாத்திரை

ராணிதிலக் எம்.வி.வி நூற்றாண்டு முன்னிட்டு, வேள்வித்தீ நாவலில் வரும் இடங்களைக் காணப் புறப்பட்டேன். அதிகாலை, காலை, நண்பகல், மாலை, இரவு என எல்லா நேரங்களிலும் சென்றிருக்கிறேன். முதன்முறையாக, எம்.வி.எம் அவர்களின் தோப்புத்தெரு வீட்டைப் பார்த்தேன். இரண்டு மாடிக் கட்டிடத்தின் முகப்புச்சுவரின் எம்.வி.எம். இந்தத் தோப்புத்தெருவை இப்பொழுதும் பார்த்துக்கொண்டிருக்கிறார், கண்ணன் என்னும் கதாப்பாத்திரம் வழியாக.  அவருடைய பழைய வீட்டை ரவிசுப்ரமணியனும், தேனுகாவின் மகன் வித்யாசங்கரும்  சொல்லும்போது, இரண்டு ஓட்டுவீடுகளை என் மனதிற்குள் வரைந்து பார்த்தேன்.  அது எம்.வி.எம்மின் வீடாக […]

மேலும்
எம்.வி.வெங்கட்ராம்

எம்.வி.வெங்கட்ராமன்

தி.ஜானகிராமன் இலக்கிய வட்டம் இதழில், “மூன்று இலக்கிய ஆசிரியர்கள்“ என்ற தலைப்பில் தி.ஜா  ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.  எம்.வி.வி, கிருத்திகா, பராங்குசம்  ஆகியோரே அந்த மூவர். அவர்களில் ஒருவரான எம்.வி.வி. குறித்த செய்திகளை மட்டும்  இக்கட்டுரையிலிருந்து எடுத்து இங்கே தனியாகப் பதிவிடப்படுகிறது பண்டிதர்களிடமும் வாசகசர்களிடமும் பிழைப்புத்  தருபவர்களிடமும் தர்மோபதேசிகளிடமும் பயப்படுகிறவர்கள் உண்மையைச் சொல்லப் பயப்படுகிறார்கள்.  அந்தக் கிலியில் உண்மை அவர்களுக்கே நாளாவட்டத்தில் புலனாகாமல் போய் விடுகிறது.   தான் ஒரு மனிதன் தனக்கு ஒரு தனித்தன்மை உண்டு என்பதையும் […]

மேலும்
எம்.வி.வெங்கட்ராம்

எம்.வி.வெங்கட்ராமின் பைத்தியக்காரப் பிள்ளை என்கிற சித்திரக் கேன்வாஸ்

வியாகுலன் அருகருகே சுவாரஸ்யமிக்க நண்பர்கள் வசிக்கிறார்கள். யார் அந்த சுவாரஸ்யமான நண்பர்கள்? ஒருவர் கரிச்சாங்குஞ்சு என்கிற நாராயணசாமி, இன்னொருவர் தி.ஜா என்கிற தி.ஜானகிராமன், மற்றொருவர் எம்.வி.வி என்கிற எம்.வி.வெங்கட்ராம். கு.ப.ராஜகோபாலனின் எழுத்தால் கவரப்பெற்று தங்கள் ஆளுமைக்குள் இலக்கியத்தை உருக்கொள்ளச் செய்த பாடைப்பாளிகள் மூவரும். எம்.வி.வெங்கட்ராம் பன்முக ஆளுமை கொண்டவர். ஒரு சிறப்பான எழுத்துமுறை எந்தெந்த வகைகளில் சாத்தியமாகிறது. அதன் உத்தி, உருவம், உள்முகம் இந்தக் கட்டமைப்புகளை மீறி இன்னொன்றின் உறவையும் அது தேடுகின்றது. அது தேடுகிற அழகே […]

மேலும்

ராஜம் தற்கொலைக்கு யார் காரணம்?

த.ராஜன் எம்.வி.வெங்கட்ராம் எழுதிய ‘பைத்தியக்காரப் பிள்ளை’ சிறுகதை வாசிப்பு… எம்.வி.வெங்கட்ராம் நூற்றாண்டு இது. நாவல்களாலேயே (‘காதுகள்’, ‘வேள்வித் தீ’, ‘நித்யகன்னி’) அவர் இன்றைய தலைமுறையால் அடையாளம் காணப்படும் சூழலில் அவரது கிளாஸிக் கதைகளில் ஒன்றை வாசித்துப்பார்க்கத் தோன்றியது. முன்னோடிகளை நினைவுகூர்ந்து புதிய தலைமுறைக்கு வழிகாட்டும் சமகாலப் படைப்பாளிகள் பலரும் ‘பைத்தியக்காரப் பிள்ளை’ கதையை எம்.வி.வெங்கட்ராமின் மிகச் சிறந்த கதையாக மதிப்பிட்டிருக்கிறார்கள். இந்தக் கதையைப் பற்றி எழுதியவர்கள் ஒவ்வொருவரும் தவறாமல் அம்மா பாத்திரத்தைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்; அம்மா பாத்திரத்தைக் குறிப்பிடாமல் […]

மேலும்

‘இலக்கியம் அர்த்தமுள்ளதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கவேண்டும்’

ஆங்கிலத்தில் பேட்டி கண்டவர் : ஒய்.  அயோத்தி                          தமிழில் :   இராம. குருநாதன் எம்.வி.வி.யுடன் நேர்காணல் நீங்கள் எப்படி உங்கள் எழுத்துப் பணியைத் தொடங்கினீர்கள் என்பதை விளக்கமுடியுமா? 13 அல்லது 14 வயதில் துப்பறியும்  நாவலை எழுதத்தொடங்கினேன். எழுதுவது எனக்கு எளிமையாக இருந்தது. இத்தனைக்கும் அறிவார்ந்த மரபில் வந்தவன் என்று சொல்லிக்கொள்ள முடியாது.  என் தந்தை மற்றும் அவரின் முந்தையோர் நெசவாளர்கள்  அல்லது அதில் மிகவும் தேர்ச்சிமிக்கவர்களாக இருந்தார்கள்.  சிறுவயது முதலே நாவல் படிப்பதில் ஆர்வம் இருந்தது. […]

மேலும்

எம்.வி.வெங்கட்ராம் சிறப்பிதழ் உள்ளடக்கம்

பின்னிரவில் பெய்த பெரும் மழைரவிசுப்பிரமணியன் இருட்டொளிகல்யாணராமன் ஆழத்தில் உறங்கும் கனவு- எம்.வி.வெங்கட்ராமின் ‘இனி புதிதாய்’பாவண்ணன் எம்.வி.வெங்கட்ராமின் நித்ய கன்னி நாவல் -ஒரு பெண்ணிய பிரதிவெளி ரங்கராஜன் கருப்பு வெள்ளை புகைப்படங்கள் ஜி.பி.இளங்கோவன் ‘இரண்டின்’ யாத்திரைராணிதிலக் எம்.வி. வெங்கட்ராமின் கோடரி – அகலிகையின் தொன்மத்தில் நிகழும் முழுமைலஷ்மி சரவணகுமார் காதுகள்: தமிழ் நாவலில் ஒரு கலகம்சுப்பிரமணி இரமேஷ் சுயநலம் என்னும் தீவிக்ரம் சிவக்குமார் புரட்சிப்பெண்எம்.வி.வெங்கட்ராம் ஆனா இம்மன்னா மாவன்னா ஆனா இப்பன்னா பாவன்னாஎம்.வி.வெங்கட்ராம் நிஜக் கனவைப் பேசிய பித்தன்ஏ. […]

மேலும்

ஆழத்தில் உறங்கும் கனவு – எம்.வி.வெங்கட்ராமின் ‘இனி புதிதாய்’

பாவண்ணன் என் தந்தையின் நண்பரொருவர் இருந்தார். அவரைச் சித்தப்பா என்று அழைப்பேன் நான். அவரும் தையல் தொழிலாளி. வறுமை மிகுந்த குடும்பச் சூழல். மூன்று பெண் பிள்ளைகள். ஒரே மகன். வீட்டின் ஆண் வாரிசு என்பதால் அவன் கூடுதலான செல்லம் கொடுத்து வளர்க்கப்பட்டான். அதுவே பெரிய பிரச்சனையானது. ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்தபட்சமாக இரண்டாண்டுகளுக்காவது தங்கிவிட்டுத்தான் அடுத்த வகுப்புக்குச் செல்வான். தலைமை ஆசிரியரே ஒருமுறை சித்தப்பாவைப் பார்த்து ‘அவனுக்குப் படிப்பு வருதோ இல்லையோ மத்ததயெல்லாம் கத்துக்குவான் போல. பேசாம […]

மேலும்

மறக்க முடியுமா?

எம்.வி.வெங்கட்ராமன் “என்ன செட்டியார்வாள். ஒரு மாதிரியாக இருக்கிறீர்கள்? ஏதாவது விசேஷம் உண்டோ?” என்று கேட்டுக்கொண்டே குப்புசாமி செட்டியாரின் பக்கத்தில் ஒரு பலகைமீது உட்கார்ந்தேன். “வாருங்கள்.  ஒன்றும் இல்லையே….“ என்று செட்டியார் இழுத்த விதத்திலிருந்தே ஏதோ விஷயம் இருக்கிறது என்ற பொருள் தொனித்தது. குப்புசாமி செட்டியார், எங்கள் வட்டாரத்தில் உள்ள ஒரு பெரிய மளிகைக் கடையின் உரிமையாளர்.  அவருடைய வாடிக்கைக்காரனான எனக்கும் அவருக்கும் எற்பட்ட பரிச்சயம் நாளடைவில் நெருங்கிய நட்பாகவே மாறிவிட்டது.  ஊர்க் காரியங்களுக்காகப் பணவசூல் செய்யும் பொதுநலப் […]

மேலும்