ஏமாந்த பூனை

எம்.வி.வி ஒரு நாள் ஒரு பூனை ஒரு வீட்டின் முன்புறத்தில் படுத்துக்கொண்டிருந்தது. அதன் எதிரிலே ‘அதிரசம்’ ஒன்று கிடந்தது. அச்சமயம் ஒரு நாய் எங்கேயாவது சாப்பாடு கிடைக்காதா என்ற மிக ஊக்கத்துடன் மூலை முடுக்கெல்லாம் தேடி ஓடிவந்து கொண்டிருந்தது. நாய், பூனை இருக்கும் இடத்திற்கு வந்தது.  பூனையின் எதிரில் இருக்கும் அதிரசத்தைப் பார்த்தது. சரி, எப்படியாவது பூனையை ஏமாற்றி அதிரசத்தைக் கவ்விக்கொண்டு போகவேண்டும் என்று எண்ணியது.  ஆகவே அந்த நாய் பூனையுடன் உறவாட ஆரம்பித்தது. நாய்: அருமைத்தோழியே! […]

மேலும்

37, தோப்புத் தெரு

சமஸ் 37, தோப்புத் தெரு. ஒரு காலத்தில் தமிழ் எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் கும்பகோணத்தில் மிக பரிச்சயமான முகவரி இது. தறிக்கூடங்களின் ஓயாத தறியோசையுயும் நெசவாளர்களின் புழக்கமும் நிறைந்த தோப்புத் தெருவில் கதவிலக்கம் 37ஆம் எண் கொண்ட வீடு ஒரு விதிவிலக்கு.பகலெல்லாம் நெசவிலும் இரவெல்லாம் கனவிலும் கரையும் அந்தத் தெரு மனிதர்கள் வாழ்விலிருந்து முற்றிலும் வேறுபட்ட வாழ்க்கையை வரித்துக்கொண்ட ஒரு மனிதர் இங்கு வாழ்ந்தார்; தமிழ்ச் செவ்வியல் புதினங்களில் ஒன்றான ‘வேள்வித்தீ’யின் கரு உருவான இடமும் ‘தேனீ’ இலக்கிய […]

மேலும்

காதுகள்: தமிழ் நாவலில் ஒரு கலகம்

சுப்பிரமணி இரமேஷ் எம்.வி.வெங்கட்ராமின் புறத்தோற்றம் எனக்கு இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனை நினைவூட்டுகிறது. என் நினைவுகளில் கொஞ்சம் புனைவும் கலந்திருக்கலாம். ஆனால், எம்.வி.வி.யின் அகத்தோற்றம் எம்.எஸ்.வி.யின் அகத்தோற்றத்தின் சாயையைக் கொண்டிருக்குமா? என்ற ஐயத்திற்கு விடை காண்பது அரிது. ஒருவர் தனது அகத்தையே இதுவென உறுதிசெய்ய முடியாதபோது, வேறொருவர் அகத்துடன் எப்படி இணைத்துப் பார்க்க முடியும்? ஸ்தூலத்தை ஒப்பிட முடியும்; சூக்குமத்தை எவ்வாறு ஒப்பிட முடியும்? ஆனாலும் இருபொருட்களும் ஒன்றன்மீது மற்றொன்று ஆதிக்கம் செலுத்திக்கொண்டே இருக்கும். எம்.வி.வி. ஸ்தூலத்தைக்கொண்டு சூக்குமப் பொருளை […]

மேலும்
எம்.வி.வெங்கட்ராம்

எம்.வி.வெங்கட்ராமின் நித்ய கன்னி நாவல் -ஒரு பெண்ணிய பிரதி

வெளி ரங்கராஜன் ஒரு பெண்ணின் உடல், மனம் இரண்டும் அறத்தின் பெயராலும், தர்மத்தின் பெயராலும் மிகக் கொடூரமான சாத்வீக வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்படுவதை புராணகால வாழ்வின் ஊடாகப் பேசும் ஒரே தமிழ்  நாவல் இது (நித்ய கன்னி முன்னுரையில் ஜே.பி.சாணக்யா).சாணக்யாவின் இப்பார்வை இந்த நாவலின் ஒரு ஆதாரமான இழையைத் தொட்டுச் செல்கிறது.மணிக்கொடி எழுத்தாளரும்,சாகித்ய அகாதெமி விருது பெற்றவருமான எம்.வி.வெங்கட்ராம் 1955இல் எழுதிய நாவல் இது. நம்முடைய தொன்மை வரலாறு மற்றும் கலாச்சாரப் பார்வைகள் குறித்த ஆழ்ந்த வாசிப்பும், நவீன இலக்கிய அணுகுமுறை […]

மேலும்

பின்னிரவில் பெய்த பெரும் மழை

ரவிசுப்பிரமணியன் மைசூர் வெங்கடாசலபதி வெங்கட்ராம் என்கிற எம்.வி.வி., தனது பதினாறாம் வயதில் எழுதிய ‘சிட்டுக்குருவி’ என்ற முதல் கதையே கு.ப.ராவாலும், ந.பிச்சமூர்த்தியாலும் வாசிக்கப்பட்டு அவர்கள் வாழ்த்துக்களோடு அவர்களாலேயே மணிக்கொடி இதழுக்கு அனுப்பப்பட்டு அவ்விதழில் பிரசுரமான கீர்த்தி பெற்றது. அதன் பின் கிட்டத்தட்ட அவரது பதினெட்டுக் கதைகள் மணிக்கொடியில் வந்தன. இளம் வயதில் முதல் கதைக்கே அப்படி பெருமை கிடைத்த எம்.வி.விக்கு ஐம்பத்தி ஆறு ஆண்டுகள் கழித்து அவரது காதுகள் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது தரப்பட்டது. காதுகள் […]

மேலும்

இருட்டொளி

கல்யாணராமன் 1 அப்போது நான் ஒரு தி.ஜானகிராமன் பைத்தியம். அப்போதென்ன அப்போது? இப்போதும்தான். பின் அந்த அப்போது எதற்கு? இங்கே அது சுமார் 30 வருடங்களைக் குறிப்பதற்காகச் சொல்லப்படுகிறது. என் பதினேழாம் வயதில் நான் மோகமுள்ளைப் படித்தேன். (அதற்குமுன், என் பதினைந்தாம் வயதில், பத்தாம் வகுப்புத் தேர்வெழுதி முடித்திருந்த கோடை விடுமுறையில், மரப்பசுவையும் வாசித்திருந்தேன்.). மோகமுள்ளில் எம்.வி.வெங்கட்ராமைப் பற்றி, “வெங்கடராமன், நீங்கள் இலட்சத்தில் ஒருவர்_” எனப் பாபு தழுதழுப்பான். அந்த வரி மனத்தில் அப்படியே நிற்கிறது. அப்போதுதான், […]

மேலும்

கருப்பு வெள்ளை புகைப்படங்கள்

ஜி.பி.இளங்கோவன் இந்துவாகிய நான் ஊழைநம்புகிறவன். நான்செய்த தீவினைகளின் பயனாகவே எழுத்தாளனாக பிறக்கநேர்ந்தது. 1992ஆம் வருடம் எம்.வி.வெங்கட்ராமின் படைப்பரங்கத்தின் இறுதியில் அவர் இப்படிப் பேச நேர்ந்தது. அவரது தனிப்பட்ட சாபமல்ல; தமிழ் எழுத்தாளர்கள் பலருக்கும் அக்காலத்தில் இயற்கை தாமாகவே முன்வந்து வழங்கிய கொடைதான் அத்துயரம். எம்.வி.வியின்  மிக நெருங்கிய நண்பரான கரிச்சான்குஞ்சுவிற்கும் அதுதான் நேர்ந்தது.  எழுத்துக்கான வெகுமதியோ, அங்கீகாரமோ கிடைக்காமல் போனதுமட்டுமல்ல தான் விரும்பி பணியாற்றிய ஆசிரியப்பணியிலும்கூட தன்னிறைவு ஏற்படாமல் விலகியே நின்றார். வீட்டு வாடகை செலுத்த முடியாமல் […]

மேலும்
வேள்வித்தீ நாவலில் வரும் பிர்மன் கோயில் தெருவில் உள்ள செளராஷ்டிரா சபையிலுள்ள எம் வி வெங்கட்ராம் புகைப்படம்

‘இரண்டின்’ யாத்திரை

ராணிதிலக் உயிரின் யாத்திரையை வாசிக்கும்போது, இரண்டு சக்கரங்கள் கொண்டு, யாருமற்ற சாரதியுடன், தானே தனியாகச் சுற்றி லயிக்கும் ஒரு மாட்டுவண்டியை ஞாபகம் கொண்டுவருகிறது. ஒரு மண்பாதை, இரண்டு மாடுகள், இரண்டு சக்கரங்கள் கொண்டு ஒரு மாட்டுவண்டி சென்றுகிறது. ஓட்டுகிறவனும் இல்லை. சுமையும் இல்லை. ஆனால் எல்லாம் இருப்பதான மாயையைத்தான் உயிரின் யாத்திரை நாவல் தருகிறது. சதாசிவம், ராஜா, ராணி, கோபு, மீனா – இந்த ஐந்து பாத்திரங்களின் இந்த ஜென்ம, போன ஜென்மக் கதைகள்தான் இந்நாவல். கனவுகள், […]

மேலும்
எம்.வி.வெங்கட்ராமன்

எம்.வி. வெங்கட்ராமின் கோடரி – அகலிகையின் தொன்மத்தில் நிகழும் முழுமை

லஷ்மி சரவணகுமார் தமிழ் புனைவுலகில் காலத்தால் அழிக்கவியலாத பங்களிப்பை செய்தவர்களில் முக்கியமானவர் எம்.வி. வெங்கட்ராம். ஒரு படைப்பாளன் தன் காலத்தில் தொடர்ந்து எழுதுவதற்கும் ஒரு இயக்கமாகச் செயல்படுவதற்கும் வேறுபாடுள்ளது. எம்.வி.வி தன் காலத்தில் ஓர் இயக்கமாய்ச் செயல்பட்டவர். சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகளோடு சிற்றிதழும் நடத்தியவர், தன் சிற்றிதழில் எழுதியவர்களுக்கு அந்தக் காலத்திலேயே அவரவர் எழுத்திற்கான சன்மானத்தையும் அனுப்பி வைத்துள்ளார். இந்த வகையில் ஒரு வருடத்தில் முப்பதாயிரம் ரூபாயை சிற்றிதழுக்காக செலவு செய்திருக்கிறார். இன்றைக்கு அதன் மதிப்பை […]

மேலும்