திருவள்ளுவர்

குறள்-61

புதல்வரைப் பெறுதல் பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்தமக்கட்பே றல்ல பிற பெறுமவற்றுள் – ஒருவன் பெறும் பேறுகளுள்; அறிவு அறிந்த மக்கட்பேறு அல்ல பிற – அறிய வேண்டுவன அறிதற்குரிய மக்களைப் பெறுதல் அல்லது பிற பேறுகளை; யாம் அறிவது இல்லை – யாம் மதிப்பது இல்லை. (‘அறிவது’ என்பது அறிதலைச் செய்வது என அத்தொழில் மேல் நின்றது. காரணம் ஆகிய உரிமை காரியம் ஆகிய அறிதலைப் பயந்தே விடுமாதலான், ‘அத்துணிவு’ பற்றி அறிந்த என இறந்த […]

மேலும்
திருவள்ளுவர்

குறள்-60

வாழ்க்கைத் துணைநலம் மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்நன்கலம் நன்மக்கட் பேறு. மங்கலம் என்ப மனை மாட்சி – ஒருவர்க்கு நன்மை என்று சொல்லுவர் அறிந்தோர், மனையாளது நற்குண நற்செய்கைகளை; அதன் நன்கலன் (என்ப) நன்மக்கட்பேறு – அவை தமக்கு நல்ல அணிகலம் என்று சொல்லுவர் நல்ல புதல்வரைப் பெறுதலை. (‘அறிந்தோர்’ என்பது எஞ்சி நின்றது. ‘மற்று’ அசை நிலை. இதனான் வாழ்க்கைத் துணைக்கு ஆவதோர் அணிகலம் கூறி, வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது.) பரிமேலழகர்

மேலும்
திருவள்ளுவர்

குறள்-59

வாழ்க்கைத் துணைநலம் புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை இகழ்வார்முன்ஏறுபோல் பீடு நடை. புகழ் புரிந்த இல் இலோர்க்கு – புகழை விரும்பிய இல்லாளை இல்லாதார்க்கு; இகழ்வார் முன் ஏறு போல் பீடுநடை இல்லை – தம்மை இகழ்ந்துரைக்கும் பகைவர்முன் சிங்க ஏறு போல நடக்கும் பெருமித நடை இல்லை. (‘புரிந்த’ என்னும் பெயரெச்சத்து அகரம் விகாரத்தால் தொக்கது. பெருமிதம் உடையானுக்குச் சிங்க ஏறு நடையான் உவமம் ஆகலின், ‘ஏறுபோல்’ என்றார். இதனால் தகைசான்ற சொல் காவா வழிப்படும் குற்றம் […]

மேலும்
திருவள்ளுவர்

குறள்-58

வாழ்க்கைத் துணைநலம் பெற்றால் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்புத்தேளிர் வாழும் உலகு. பெண்டிர் பெற்றான் பெறின் – பெண்டிர் தம்மை எய்திய கணவனை வழிபடுதல் பெறுவராயின்; புத்தேளிர் வாழும் உலகு பெருஞ்சிறப்புப் பெறுவர் – புத்தேளிர் வாழும் உலகின் கண் அவரால் பெருஞ்சிறப்பினைப் பெறுவர். (வழிபடுதல் என்பது சொல்லெச்சம். இதனால் தற்கொண்டாற் பேணிய மகளிர் புத்தேளிரால் பேணப்படுவர் என்பது கூறப்பட்டது.) பரிமேலழகர்

மேலும்
திருவள்ளுவர்

குறள்-57

வாழ்க்கைத் துணைநலம் சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்நிறைகாக்குங் காப்பே தலை. மகளிர் சிறைகாக்கும் காப்பு எவன் செய்யும் – மகளிரைத் தலைவர் சிறையால் காக்கும் காவல் என்ன பயனைச் செய்யும்? நிறை காக்கும் காப்பே தலை – அவர் தமது நிறையால் காக்கும் காவலே தலையாய காவல். (சிறை : மதிலும், வாயில்காவலும் முதலாயின. நிறை: நெஞ்சைக் கற்பு நெறியில் நிறுத்தல். காவல் இரண்டினும் நிறைக் காவல் இல்வழி ஏனைச் சிறைக்காவலால் பயன் இல்லை என்பார், ‘நிறைகாக்கும் […]

மேலும்
திருவள்ளுவர்

குறள்-56

வாழ்க்கைத் துணைநலம் தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்றசொல்காத்துச் சோர்விலாள் பெண். தன் காத்துத் தன் கொண்டான் பேணி – கற்பினின்றும் வழுவாமல்தன்னைக் காத்துத் தன்னைக் கொண்டவனையும் உண்டி முதலியவற்றால் பேணி; தகைசான்ற சொல் காத்து – இருவர் மாட்டும் நன்மை அமைந்த புகழ் நீங்காமல் காத்து; சோர்வு இலாள் பெண் – மேற்சொல்லிய நற்குண நற்செய்கைகளினும் கடைப்பிடி உடையவளே பெண் ஆவாள். (தன் மாட்டுப் புகழாவது, வாழும் ஊர் கற்பால் தன்னைப் புகழ்வது. சோர்வு-மறவி. இதனால் கற்புடையாளது […]

மேலும்
திருவள்ளுவர்

குறள்-55

இல்வாழ்க்கைத் துணைநலம் தெய்வந் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்எனப் பெய்யும் மழை. தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள் பெய்என – பிற தெய்வம் தொழாது தன் தெய்வம் ஆகிய கொழுநனைத் தொழாநின்று துயிலெழுவாள் ‘பெய்’ என்று சொல்ல; மழை பெய்யும்-மழை பெய்யும். (தெய்வம் தொழுதற்கு மனம் தெளிவது துயிலெழும் காலத்தாகலின், ‘தொழுது எழுவாள்’ என்றார். ‘தொழாநின்று’ என்பது, ‘தொழுது’ எனத் திரிந்து நின்றது. தெய்வம்ந்தான் ஏவல் செய்யும் என்பதாகும். இதனால் கற்புடையவளது ஆற்றல் கூறப்பட்டது.) பரிமேலழகர்

மேலும்
திருவள்ளுவர்

குறள்-54

இல்வாழ்க்கைத் துணைநலம் பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்திண்மைஉண் டாகப் பெறின். பெண்ணின் பெருந்தக்க யாஉள-ஒருவன் எய்தும் பொருள்களுள் இல்லாளின் மேம்பட்ட பொருள்கள் யாவை உள; கற்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின் – அவள் மாட்டுக்கற்பு என்னும் கலங்கா நிலைமை உண்டாகப் பெறின். (கற்புடையாள் போல அறம் முதலிய மூன்றற்கும் ஏதுவாவன பிற இன்மையின் ‘யாஉள’ என்றார். இதனால் கற்பு நலத்தது சிறப்புக் கூறப்பட்டது.) பரிமேலழகர்

மேலும்
திருவள்ளுவர்

குறள்-53

இல்வாழ்க்கைத் துணைநலம் இல்லதென் இல்லவள் மாண்பானால்; உள்ளதென்இல்லவள் மாணாக் கடை இல்லவள் மாண்பு ஆனால் இல்லது என் – ஒருவனுக்கு இல்லாள் நற்குண நற்செய்கையள் ஆயினக்கால் இல்லாதது யாது? இல்லவள் மாணாக்கடை உள்ளது என் – அவள் அன்னள் அல்லாக்கால் உள்ளது யாது? (‘மாண்பு’ எனக்குணத்தின் பெயர் குணிமேல் நின்றது. இவை இரண்டு பாட்டானும் இல்வாழ்க்கைக்கு வேண்டுவது இல்லாளது மாட்சியே, பிற அல்ல என்பது கூறப்பட்டது.) பரிமேலழகர்

மேலும்
திருவள்ளுவர்

குறள்-52

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கைஎனைமாட்சித்து ஆயினும் இல். மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் – மனையறத்திற்குத் தக்க நற்குண நற்செய்கைகள் ஒருவன் இல்லாளிடத்து இல்லையாயின்; வாழ்க்கை எனைமாட்சித்து ஆயினும் இல் – அவ்வில்வாழ்க்கை செல்வத்தான் எத்துணை மாட்சிமையுடைத்தாயினும் அஃது உடைத்தன்று. (‘இல்’ என்றார் பயன்படாமையின்.) பரிமேலழகர்

மேலும்