சிகப்புச்சொற்கள்

ராணிதிலக் ஜியார்ஜ் ப்ளாய்ட்டின் கழுத்தின்மேல் ஒரு வெள்ளைக்கால் அழுத்துகிறது. அவருடைய மரணம் முன்னிட்டுப் பல போராட்டங்கள் இப்பொழுது நிகழ்ந்துகொண்டுதானிருக்கின்றன. நம் கழுத்தின்மீது பன்னாட்டு நிறுவனங்கள், பணக்கார நிறுவனங்கள், பொழுதுபோக்கு நிறுவனங்கள் நம்முடைய அனுமதியுடன் கால் வைத்து அழுத்திக்கொண்டிருக்கின்றன. இருந்தபோதும் நம் சிரித்தபடியே அதை வரவேற்றுக்கொண்டிருக்கிறோம்.இதற்கு எதிரான குரல்களாக நம் குரல்கள் மாறவில்லை.தங்கநாற்கர சாலைகள், அதிவிரைவு சாலைகளுக்காக நம் வீடு, தோட்டம், சிறு குளங்கள், நீண்டு அகன்ற மரங்கள், சில பழைய மனிதர்களை இழந்துகொண்டிருக்கிறோம். அதையும் எதிர்ப்பதில்லை நாம். […]

மேலும்
அரோரா

கணங்களின் நடனம்

ராணிதிலக் சாகிப்கிரான் கவிதைகளின் அறிமுகம், வண்ணச்சிதைவு தொகுப்பின் வழியாகத்தான் அமைந்தது. படிமமும் குறியீடுகளும் நிறைந்திருந்த தொகுப்பு அது. வாழ்வின் கணங்களில் தோன்றும் தத்துவம் உரையாடல் கொண்ட தொகுப்பு முழுவதும் மொழி முதன்மையாகியிருந்தது. ஓருசேர அபியையும் சி.மணியையும் பிரமிளையும் ஞாபகம்செய்த வரிகள் அவை. மொழி ஒரு குறியீடாகி, படிமமாகி, அரூபக் கவிதைகள் அவை. சாகிப்கிரானின் ஆளுமை முழுவதும் திரைகளுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டிருந்தது. சமீபத்தில் வந்த ‘அரோரா’ அப்படியில்லை. குறைந்தபட்சம் ஐந்து தடவையாவது வாசித்திருப்பேன். அரோரா என்பது துருவ ஒளி. வட, தென்துருவங்களில் […]

மேலும்
நிக்கி ஜியோவன்னி

கருப்பு எழுத்துகள்

ராணிதிலக் நீக்ரோவியம் என்னும் வார்த்தையை லியோபோல்டு சிடார்செங்கார் கட்டுரையொன்றின் வழியாகவே அறிமுகம் பெற்றிருக்கிறேன். அந்த அறிமுகம்கூட, தமிழில் முதன்முதலில் இந்திரன் அவர்களின் முயற்சியால் வெளியான, “அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்” என்ற ஆப்பிரிக்க எழுத்துகள் பற்றிய தொகுப்பின் வழியாகத்தான்.  1982இல் வெளியான இந்நூலை, கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பிறகு வாசித்திருக்கிறேன். ஒரு கருப்பு மங்கையின் கண்ணீர் துளி துயரத்தில் சொட்டும் காட்சி கருப்பு இலக்கியம் வாசிக்கும்போது தோன்றுவது இன்னும் தீரவே இல்லை. கண் நீர்த்துளிகள் யாவும் கருப்பாய்த் […]

மேலும்
குறைந்த ஆயுள் கொண்ட உயிரி

சாமான்யத்தின் குரல்

ராணிதிலக் என் பால்யத்தில் தறியின் ஓசை நிரம்பியிருந்தது. நான் வாழ்ந்த ஊரின் எல்லாத் தெருக்களிலும் தறி நெய்யும் ஓசை, அசோகமித்திரனின் தண்ணீர் கதையில் வரும் தண்ணீர்ப் பம்புகளின் ஓசையைப்போல் கேட்டுக்கொண்டேயிருக்கும். தறியை நெய்வது என்பது அவ்வளவு எளிய பணி இல்லை. நடு இரவு முழுவதும், விடியற்காலையிலும் தொடரப்படும் பணி அது. அவ்வளவு கடினம். தறி நெய்பவர்கள் எளிமையானவர்கள் ஆனால் அவர்கள் தம் வாழ்க்கை அதிலும் கடினமானது. அந்த வாழ்வைச் சொல்லும் கவிதைகள் சில, “குறைந்த ஆயுள் வாழும் […]

மேலும்
கொல்கத்தா

ராக் தர்பார்

ராணிதிலக் சுப்ரமண்ய பாரதியின். நின்னையே ரதி என்ற பாடலைச் சஞ்சய் சுப்ரமண்யன் பாட கேட்டுக்கொண்டிருந்தேன். 35 வது இயல், இசை, நாடக விழாவில் (2014-15) பாடிய பாடல் அது. ராகம் பாகேஸ்ரீ. பாடலை ஆரோகணம், அவரோகணத்துடன் பாடும்பொழுது பெருத்த மௌனம் சூழ்ந்தது. காத்திருப்பும் உணர்ச்சியும் அடங்கிய த்வனி அது.  பாம்பே ஜெயஸ்ரீ இந்த ராகத்தை ஹிந்துஸ்தானில் பாடியும் இருக்கிறார். அக்பர் அவையில் தான்சேன் முதன்முதலில் பாடியதான குறிப்பையும் வாசித்திருக்கிறேன். அம்மா ஒரு வேலைக்காரியாக, சமையல்காரியாக மாறி வாழும் […]

மேலும்
நேற்றின் ஜன்னலுக்குப் பார்வையைத் திருப்புதல்

தத்திக் கப்பலின் நடனம்

ராணிதிலக் ஒரு கவிதை எதைப் பற்றிப் பேசத் துடிக்கிறது? அது பேசிய பிறகு நமக்குள் எந்தவிதமான மாற்றத்தை ஏற்படுத்துகிறது?  கவிதை என்பது அந்தரங்கமான ஒன்றா? நம் அந்தரங்க வாழ்வின் கவிதைகள், பொதுவெளியில் யாவரின் அந்தரங்கம்தானா? தனித்தனி அனுபவங்களாலான கவிதைகள் ஒரு தொகுதியாக அமையும்போது நாம் தேடும் இழை கவிஞருடையதா? கவிதைகளுடையதா? எனப் பல கேள்விகள் பா.ராஜாவின் கவிதைகளில் எழச்செய்கின்றன. அந்தரங்கத்தன்மையிலான பல கவிதைகளில் துயரம் ஒரு மீட்கமுடியாத, ஆறாத வடுவான சம்பவமாக நிகழ்கிறது. தனக்கு ஏற்பட்ட துயரமே […]

மேலும்
ஆர்த்ர் ரைம்போ

ஒரு கவிஞரின் வாக்குமூலம்

ராணிதிலக் மிகவும் அபூர்வமான காட்சிகள் என் கனவி்ல் வருவதுண்டு. என்னுடைய கவிதையில் வானில் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு ஆற்றை எழுதியிருந்தேன். அது ஒரு கனவு. அதுபோல, ரைம்போவின் கனவில் கடல் காட்சியளிக்கிறது.  அதன்மீது தங்கக் கப்பல்கள் செல்வதாக எழுதுகிறார். கனவுகள், கற்பனைகள், மனக்கிலேசங்கள் யாவும் கவிதைக்கான ஊற்றாக மாறக்கூடும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் நம் குற்றமுள்ள மனதை, அதன் கீழ்மையை முழுக்க நம்மால் எழுதமுடிகிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்லத்தான்வேண்டும். மேலும் அதிகாரத்திற்கு முன்பாக, […]

மேலும்
அந்த விளக்கின் ஒளி பரவாதது

அன்றாடத்தின் துயர் வரிகள்

ராணிதிலக் அகச்சேரனின்  முதல் கவிதைத் தொகுதியான அன்பின் நடுநரம்பு (2012) பிறகு, ஏழு வருடங்கள் கழித்து இரண்டாவது தொகுப்பாக வந்துள்ளதுதான், இத்தொகுதி. அதிக இடைவெளி என்பது கவிஞரின் எழுதுமனோநிலைதான் காரணமாக இருக்கலாம். இவரின் முதல் தொகுதியின் சில கவிதைகளை அவ்வப்போது வாசித்திருக்கிறேன். இரண்டாவது தொகுப்பை வாசிக்கும்போது, அவருக்குள் ஒரு பக்குவமும் மென்மையும் தீர்க்கமும் வந்திருப்பதைக் காணமுடிகிறது. ரெப்பை அரிந்த விழி தொடங்கி அமரத்துவம் வரையிலான 29  கவிதைகளை முதல்வாசிப்பில் வாசிக்கும்போது, துயரம் ஒரு மலையாக, மேகமாக எனக்குள் […]

மேலும்
மலர்கள் விட்டுச்சென்ற வெற்றிடத்தில்

பனி வரிகள்

ராணிதிலக் சில மாதங்களுக்கு முன் comfort women  என்ற கட்டுரையுடன் கிம் ஹை சூன் சில கவிதைகளைக் கவிஞர் விருட்சன் மொழிபெயர்த்துக் கல்குதிரை இதழுக்கு அனுப்பி வைத்தார்.  ஜப்பானியர்களின் கொடூரமனம் என்ன என்பதை அக்கட்டுரையில் அறியமுடிகிறது.  ஜப்பான் ராணுவம் அமைத்த முகாமில், ராணுவத்தினரின் காமத்தைத் தீர்த்துக்கொள்ள, கொரிய சிறுமிகளையும் பெண்களையும் கொண்டு வன்புணர்வு செய்திருக்கிறார்கள். இதை அவர்கள், comfort women  என்ற சொல்லால் வரையறுத்து வன்புணர்வு செய்திருக்கிறார்கள்.  பாதிக்கப்பட்ட பெண்களின் துயரமாகவே கொரியாவை நான் காண்கிறேன்.  அந்த […]

மேலும்
குளிர்மலை

குளிர்மலை-ஹான்ஷான்

ராணிதிலக் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன்பாக, சி.மணி அவர்களின் மொழியெர்ப்பில், தாவோ தே ஜிங் வாசித்த ஞாபகம், இப்பொழுது ஹான்ஷான் கவிதைகளை வாசிக்கும்போது, நினைவில் வருகிறது. தாவோ என்னும் சமயத்திற்கு அடிப்படையான தாவோ தே ஜிங் எழுதியவர் லாவோட்சு. இது எல்லாருக்கும் தெரியும். இந்த நூல் ஆறாம் நூற்றாண்டில் வருகிறது என்றால், ஹான்ஷான் கவிதைகளின் காலம் கி.பி.9ற்குள் என்று சொல்லலாம். தாவோ மற்றும் சான் மரபை ஒட்டிய கவிதைகள், ஹான்ஷானுடையவை. தாவோ தே ஜிங் தத்துவம் எனில், […]

மேலும்