நுண்மியும் நன்மை தரும்

குடந்தை சத்யா இப்படி நடக்கும் அல்லது இப்படி நாம் நடந்து கொள்வோம் என்று கனவிலும் நினைத்துப் பார்த்திடாத சூழல் எழுந்துள்ளது. மின்னணு, தகவல் தொழில்நுட்பம், பிற கோள்களில் குடியேறும் முயற்சி, செயற்கைக் கோள்களை உருவாக்கும் அறிவாற்றல் என மனிதன் சிறகுகளின்றி பறந்து, பயணித்து வருகிறான். அச்சமூட்டும் தோற்றம் கொண்ட பெரிய விலங்குகளையும் வேட்டையாடி கூண்டில் அடைத்துவிடும் வல்லமை பெற்றவன் என்று தனது வீரத்தைப் பரைசாற்றிக் கொள்கிறான். ஆனால் இன்று கண்ணுக்குத் தெரியாத தீநுண்மிக்குப் பயந்துபோய், உயிர்மேல் கொண்ட […]

மேலும்

எம்.வி.வெங்கட்ராம் சிறப்பிதழ் உள்ளடக்கம்

பின்னிரவில் பெய்த பெரும் மழைரவிசுப்பிரமணியன் இருட்டொளிகல்யாணராமன் ஆழத்தில் உறங்கும் கனவு- எம்.வி.வெங்கட்ராமின் ‘இனி புதிதாய்’பாவண்ணன் எம்.வி.வெங்கட்ராமின் நித்ய கன்னி நாவல் -ஒரு பெண்ணிய பிரதிவெளி ரங்கராஜன் கருப்பு வெள்ளை புகைப்படங்கள் ஜி.பி.இளங்கோவன் ‘இரண்டின்’ யாத்திரைராணிதிலக் எம்.வி. வெங்கட்ராமின் கோடரி – அகலிகையின் தொன்மத்தில் நிகழும் முழுமைலஷ்மி சரவணகுமார் காதுகள்: தமிழ் நாவலில் ஒரு கலகம்சுப்பிரமணி இரமேஷ் சுயநலம் என்னும் தீவிக்ரம் சிவக்குமார் புரட்சிப்பெண்எம்.வி.வெங்கட்ராம் ஆனா இம்மன்னா மாவன்னா ஆனா இப்பன்னா பாவன்னாஎம்.வி.வெங்கட்ராம் நிஜக் கனவைப் பேசிய பித்தன்ஏ. […]

மேலும்

ஆழத்தில் உறங்கும் கனவு – எம்.வி.வெங்கட்ராமின் ‘இனி புதிதாய்’

பாவண்ணன் என் தந்தையின் நண்பரொருவர் இருந்தார். அவரைச் சித்தப்பா என்று அழைப்பேன் நான். அவரும் தையல் தொழிலாளி. வறுமை மிகுந்த குடும்பச் சூழல். மூன்று பெண் பிள்ளைகள். ஒரே மகன். வீட்டின் ஆண் வாரிசு என்பதால் அவன் கூடுதலான செல்லம் கொடுத்து வளர்க்கப்பட்டான். அதுவே பெரிய பிரச்சனையானது. ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்தபட்சமாக இரண்டாண்டுகளுக்காவது தங்கிவிட்டுத்தான் அடுத்த வகுப்புக்குச் செல்வான். தலைமை ஆசிரியரே ஒருமுறை சித்தப்பாவைப் பார்த்து ‘அவனுக்குப் படிப்பு வருதோ இல்லையோ மத்ததயெல்லாம் கத்துக்குவான் போல. பேசாம […]

மேலும்

மறக்க முடியுமா?

எம்.வி.வெங்கட்ராமன் “என்ன செட்டியார்வாள். ஒரு மாதிரியாக இருக்கிறீர்கள்? ஏதாவது விசேஷம் உண்டோ?” என்று கேட்டுக்கொண்டே குப்புசாமி செட்டியாரின் பக்கத்தில் ஒரு பலகைமீது உட்கார்ந்தேன். “வாருங்கள்.  ஒன்றும் இல்லையே….“ என்று செட்டியார் இழுத்த விதத்திலிருந்தே ஏதோ விஷயம் இருக்கிறது என்ற பொருள் தொனித்தது. குப்புசாமி செட்டியார், எங்கள் வட்டாரத்தில் உள்ள ஒரு பெரிய மளிகைக் கடையின் உரிமையாளர்.  அவருடைய வாடிக்கைக்காரனான எனக்கும் அவருக்கும் எற்பட்ட பரிச்சயம் நாளடைவில் நெருங்கிய நட்பாகவே மாறிவிட்டது.  ஊர்க் காரியங்களுக்காகப் பணவசூல் செய்யும் பொதுநலப் […]

மேலும்

ஏமாந்த பூனை

எம்.வி.வி ஒரு நாள் ஒரு பூனை ஒரு வீட்டின் முன்புறத்தில் படுத்துக்கொண்டிருந்தது. அதன் எதிரிலே ‘அதிரசம்’ ஒன்று கிடந்தது. அச்சமயம் ஒரு நாய் எங்கேயாவது சாப்பாடு கிடைக்காதா என்ற மிக ஊக்கத்துடன் மூலை முடுக்கெல்லாம் தேடி ஓடிவந்து கொண்டிருந்தது. நாய், பூனை இருக்கும் இடத்திற்கு வந்தது.  பூனையின் எதிரில் இருக்கும் அதிரசத்தைப் பார்த்தது. சரி, எப்படியாவது பூனையை ஏமாற்றி அதிரசத்தைக் கவ்விக்கொண்டு போகவேண்டும் என்று எண்ணியது.  ஆகவே அந்த நாய் பூனையுடன் உறவாட ஆரம்பித்தது. நாய்: அருமைத்தோழியே! […]

மேலும்

37, தோப்புத் தெரு

சமஸ் 37, தோப்புத் தெரு. ஒரு காலத்தில் தமிழ் எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் கும்பகோணத்தில் மிக பரிச்சயமான முகவரி இது. தறிக்கூடங்களின் ஓயாத தறியோசையுயும் நெசவாளர்களின் புழக்கமும் நிறைந்த தோப்புத் தெருவில் கதவிலக்கம் 37ஆம் எண் கொண்ட வீடு ஒரு விதிவிலக்கு.பகலெல்லாம் நெசவிலும் இரவெல்லாம் கனவிலும் கரையும் அந்தத் தெரு மனிதர்கள் வாழ்விலிருந்து முற்றிலும் வேறுபட்ட வாழ்க்கையை வரித்துக்கொண்ட ஒரு மனிதர் இங்கு வாழ்ந்தார்; தமிழ்ச் செவ்வியல் புதினங்களில் ஒன்றான ‘வேள்வித்தீ’யின் கரு உருவான இடமும் ‘தேனீ’ இலக்கிய […]

மேலும்

காதுகள்: தமிழ் நாவலில் ஒரு கலகம்

சுப்பிரமணி இரமேஷ் எம்.வி.வெங்கட்ராமின் புறத்தோற்றம் எனக்கு இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனை நினைவூட்டுகிறது. என் நினைவுகளில் கொஞ்சம் புனைவும் கலந்திருக்கலாம். ஆனால், எம்.வி.வி.யின் அகத்தோற்றம் எம்.எஸ்.வி.யின் அகத்தோற்றத்தின் சாயையைக் கொண்டிருக்குமா? என்ற ஐயத்திற்கு விடை காண்பது அரிது. ஒருவர் தனது அகத்தையே இதுவென உறுதிசெய்ய முடியாதபோது, வேறொருவர் அகத்துடன் எப்படி இணைத்துப் பார்க்க முடியும்? ஸ்தூலத்தை ஒப்பிட முடியும்; சூக்குமத்தை எவ்வாறு ஒப்பிட முடியும்? ஆனாலும் இருபொருட்களும் ஒன்றன்மீது மற்றொன்று ஆதிக்கம் செலுத்திக்கொண்டே இருக்கும். எம்.வி.வி. ஸ்தூலத்தைக்கொண்டு சூக்குமப் பொருளை […]

மேலும்
எம்.வி.வெங்கட்ராம்

எம்.வி.வெங்கட்ராமின் நித்ய கன்னி நாவல் -ஒரு பெண்ணிய பிரதி

வெளி ரங்கராஜன் ஒரு பெண்ணின் உடல், மனம் இரண்டும் அறத்தின் பெயராலும், தர்மத்தின் பெயராலும் மிகக் கொடூரமான சாத்வீக வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்படுவதை புராணகால வாழ்வின் ஊடாகப் பேசும் ஒரே தமிழ்  நாவல் இது (நித்ய கன்னி முன்னுரையில் ஜே.பி.சாணக்யா).சாணக்யாவின் இப்பார்வை இந்த நாவலின் ஒரு ஆதாரமான இழையைத் தொட்டுச் செல்கிறது.மணிக்கொடி எழுத்தாளரும்,சாகித்ய அகாதெமி விருது பெற்றவருமான எம்.வி.வெங்கட்ராம் 1955இல் எழுதிய நாவல் இது. நம்முடைய தொன்மை வரலாறு மற்றும் கலாச்சாரப் பார்வைகள் குறித்த ஆழ்ந்த வாசிப்பும், நவீன இலக்கிய அணுகுமுறை […]

மேலும்

பின்னிரவில் பெய்த பெரும் மழை

ரவிசுப்பிரமணியன் மைசூர் வெங்கடாசலபதி வெங்கட்ராம் என்கிற எம்.வி.வி., தனது பதினாறாம் வயதில் எழுதிய ‘சிட்டுக்குருவி’ என்ற முதல் கதையே கு.ப.ராவாலும், ந.பிச்சமூர்த்தியாலும் வாசிக்கப்பட்டு அவர்கள் வாழ்த்துக்களோடு அவர்களாலேயே மணிக்கொடி இதழுக்கு அனுப்பப்பட்டு அவ்விதழில் பிரசுரமான கீர்த்தி பெற்றது. அதன் பின் கிட்டத்தட்ட அவரது பதினெட்டுக் கதைகள் மணிக்கொடியில் வந்தன. இளம் வயதில் முதல் கதைக்கே அப்படி பெருமை கிடைத்த எம்.வி.விக்கு ஐம்பத்தி ஆறு ஆண்டுகள் கழித்து அவரது காதுகள் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது தரப்பட்டது. காதுகள் […]

மேலும்