இருட்டொளி

கல்யாணராமன் 1 அப்போது நான் ஒரு தி.ஜானகிராமன் பைத்தியம். அப்போதென்ன அப்போது? இப்போதும்தான். பின் அந்த அப்போது எதற்கு? இங்கே அது சுமார் 30 வருடங்களைக் குறிப்பதற்காகச் சொல்லப்படுகிறது. என் பதினேழாம் வயதில் நான் மோகமுள்ளைப் படித்தேன். (அதற்குமுன், என் பதினைந்தாம் வயதில், பத்தாம் வகுப்புத் தேர்வெழுதி முடித்திருந்த கோடை விடுமுறையில், மரப்பசுவையும் வாசித்திருந்தேன்.). மோகமுள்ளில் எம்.வி.வெங்கட்ராமைப் பற்றி, “வெங்கடராமன், நீங்கள் இலட்சத்தில் ஒருவர்_” எனப் பாபு தழுதழுப்பான். அந்த வரி மனத்தில் அப்படியே நிற்கிறது. அப்போதுதான், […]

மேலும்

கருப்பு வெள்ளை புகைப்படங்கள்

ஜி.பி.இளங்கோவன் இந்துவாகிய நான் ஊழைநம்புகிறவன். நான்செய்த தீவினைகளின் பயனாகவே எழுத்தாளனாக பிறக்கநேர்ந்தது. 1992ஆம் வருடம் எம்.வி.வெங்கட்ராமின் படைப்பரங்கத்தின் இறுதியில் அவர் இப்படிப் பேச நேர்ந்தது. அவரது தனிப்பட்ட சாபமல்ல; தமிழ் எழுத்தாளர்கள் பலருக்கும் அக்காலத்தில் இயற்கை தாமாகவே முன்வந்து வழங்கிய கொடைதான் அத்துயரம். எம்.வி.வியின்  மிக நெருங்கிய நண்பரான கரிச்சான்குஞ்சுவிற்கும் அதுதான் நேர்ந்தது.  எழுத்துக்கான வெகுமதியோ, அங்கீகாரமோ கிடைக்காமல் போனதுமட்டுமல்ல தான் விரும்பி பணியாற்றிய ஆசிரியப்பணியிலும்கூட தன்னிறைவு ஏற்படாமல் விலகியே நின்றார். வீட்டு வாடகை செலுத்த முடியாமல் […]

மேலும்
வேள்வித்தீ நாவலில் வரும் பிர்மன் கோயில் தெருவில் உள்ள செளராஷ்டிரா சபையிலுள்ள எம் வி வெங்கட்ராம் புகைப்படம்

‘இரண்டின்’ யாத்திரை

ராணிதிலக் உயிரின் யாத்திரையை வாசிக்கும்போது, இரண்டு சக்கரங்கள் கொண்டு, யாருமற்ற சாரதியுடன், தானே தனியாகச் சுற்றி லயிக்கும் ஒரு மாட்டுவண்டியை ஞாபகம் கொண்டுவருகிறது. ஒரு மண்பாதை, இரண்டு மாடுகள், இரண்டு சக்கரங்கள் கொண்டு ஒரு மாட்டுவண்டி சென்றுகிறது. ஓட்டுகிறவனும் இல்லை. சுமையும் இல்லை. ஆனால் எல்லாம் இருப்பதான மாயையைத்தான் உயிரின் யாத்திரை நாவல் தருகிறது. சதாசிவம், ராஜா, ராணி, கோபு, மீனா – இந்த ஐந்து பாத்திரங்களின் இந்த ஜென்ம, போன ஜென்மக் கதைகள்தான் இந்நாவல். கனவுகள், […]

மேலும்
எம்.வி.வெங்கட்ராமன்

எம்.வி. வெங்கட்ராமின் கோடரி – அகலிகையின் தொன்மத்தில் நிகழும் முழுமை

லஷ்மி சரவணகுமார் தமிழ் புனைவுலகில் காலத்தால் அழிக்கவியலாத பங்களிப்பை செய்தவர்களில் முக்கியமானவர் எம்.வி. வெங்கட்ராம். ஒரு படைப்பாளன் தன் காலத்தில் தொடர்ந்து எழுதுவதற்கும் ஒரு இயக்கமாகச் செயல்படுவதற்கும் வேறுபாடுள்ளது. எம்.வி.வி தன் காலத்தில் ஓர் இயக்கமாய்ச் செயல்பட்டவர். சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகளோடு சிற்றிதழும் நடத்தியவர், தன் சிற்றிதழில் எழுதியவர்களுக்கு அந்தக் காலத்திலேயே அவரவர் எழுத்திற்கான சன்மானத்தையும் அனுப்பி வைத்துள்ளார். இந்த வகையில் ஒரு வருடத்தில் முப்பதாயிரம் ரூபாயை சிற்றிதழுக்காக செலவு செய்திருக்கிறார். இன்றைக்கு அதன் மதிப்பை […]

மேலும்
எம்.வி.வெங்கட்ராம்

சுயநலம் என்னும் தீ

விக்ரம் சிவக்குமார் ‘வேள்வித்தீ’ புனிதத்தைத் தேடுவதற்காக வைதீக மரபில் செய்யப்படும் சடங்கியலைத் தாங்கும் விதமாக தலைப்பிலேயே எம்.வி.வி தன் பக்தியின் நிலையை முன்னிறுத்தித் தன் அகவெளியைச் சமரசம் செய்துகொள்வதற்காக, இந்நாவலைப் பிராயசித்தமாகப் படைத்துள்ளார். இந்நாவல் கும்பகோணத்தில் வாழும் சௌராஷ்டிரர்கள் என்னும் குஜராத்திப் பிராமண வகுப்பினரின் வாழ்வியலைச் சொல்ல முற்பட்டு, வெகுதூரம் அக வாழ்வியல் சிக்கல்களைப் பேசி முரண்பட்டுவிட்டது. எம்.வி.வியின் வெற்றியும் அதுதான், தோல்வியும் அதுதான். அதற்கான காரணங்களை நாம் அவரது படைப்புலகத்திலிருந்தே வெகுவாகக் காணலாம். பெரும்பாலும் அவருடைய […]

மேலும்
ஓவியம்: சாகர்

புரட்சிப்பெண்

எம்.வி.வெங்கட்ராம் எளிமையே  வடிவெடுத்து  வந்ததுபோல் வெண்மையான நூல் சேலையும் ரவிக்கையும் உடுத்திக்கொண்டு பிரகாசமாய் உள்ளே புகுந்த சாவித்திரியைப் பார்த்த சீனிவாச ஐயரின் மனதில் முதலில் இயற்கையான ஓர் அமைதிதான் ஏற்பட்டது; ஆனால்,  மறுவினாடி, தம்முடைய மகள் இவ்வளவு ஏழ்மைக் கோலத்தில் காட்சி அளிக்கிறாள் என்ற எண்ணம் அவருக்குக் கொஞ்சம் வருத்தம் உண்டாக்கத்தான் செய்தது.  “வா, அம்மா உட்காரு” “சொந்த வீட்டிலேயே என்னை விருந்தாளி ஆக்கி விட்டீர்களே!”  என்று சிரித்துக்கொண்டே தகப்பனாருக்கு எதிரிலிருந்த நாற்காலியில் உட்கார்ந்தாள் சாவித்திரி. ” […]

மேலும்
ஓவியம்: உகி

ஆனா இம்மன்னா மாவன்னா ஆனா இப்பன்னா பாவன்னா

எம்.வி.வெங்கட்ராம் 1 ஒருநாள் மாலை பள்ளிக்கூடத்திலிருந்து மிகவும் அவசரமாய் வீட்டுக்குத் திரும்பினேன்.  வீட்டில் நான் தாராளமாக நுழைந்துவிட முடியாது.  என் தகப்பனார் கண்களில் விழுந்து விடக்கூடாது; வீட்டின் முன் கட்டிலேயே குமாஸ்தாக்களிடம் கணக்குச் சொல்லிக் கொண்டோ, பார்சல் கட்டிக்கொண்டோ அல்லது நெசவாளர்களுக்குப்  பட்டு நிறுத்துக் கொண்டோ, திட்டிக் கொண்டோ இருப்பார். அவர் பார்வை என் மீது விழுந்து விட்டால் போதும், உடனே ஏதாவது வேலை சொல்வார். அன்றைக்கு என் அதிர்ஷ்டம்.  அப்பா வெளியே போயிருந்தார். வீட்டின் கடைக் […]

மேலும்
எம்.வி.வெங்கட்ராம்

நிஜக் கனவைப் பேசிய பித்தன்

ஏ. தனசேகர் எம்.வி.வெங்கட்ராம் என்ற பெயர் எனக்கு அறிமுகமானது என்னுடைய கல்லூரி பருவத்தில்தான். நவீன இலக்கியத்திற்குள் நுழைந்த புதுசு. எதை வாசிக்க வேண்டும் என்றெல்லாம் தெரியாமல் குருட்டாம்போக்கில் வாசித்துக்கொண்டிருந்தேன். மு.வ.வின் ‘அகல் விளக்கு’ நாவலின் முன்னுரையில் சாகித்திய அகாதெமி விருதுபெற்றது என்பதைப் படித்தவுடன், தமிழில் அதுவரை சாகித்திய அகாதெமி விருது பெற்ற புத்தகங்களின் பட்டியலைத் தயாரித்தேன். ‘காதுகள்’ என்ற நாவலுக்காக எம்.வி.வி சாகித்திய அகாதெமி விருது வாங்கியிருந்தார். அப்போதுதான் எம்.வி.வி. பெயரை முதலில் பார்த்தது. பட்டியல் தயாரித்ததில் […]

மேலும்

வார்த்தைகளால் செய்த பட்டுச் சேலை

இல.சொ.சத்தியமூர்த்தி மேனிலைப் பள்ளித் தேர்வுகள் முடிவுற்ற பின்னர் 1988ஆம் ஆண்டின் கோடைக்கால விடுமுறையில் கும்பகோணம் பேட்டை கிளை நூலகத்தில் வேள்வித்தீ புதினத்தை (சு)வாசித்தேன். அந்நாவலைப் படித்த மற்ற வாசகர்கள் அடைந்திராத, வார்த்தைகளால் விவரிக்க முடியாத உணர்வைப் பெற்றவன். ஏனெனில் வேள்வித் தீயின் கதை, களம் என்ற இரண்டுமே எங்கள் பகுதி நெசவாளர் நிலை, அவர்களது தனிப்பட்ட வாழ்வு என்பதால் உணர்வுகளால் உந்தப்பட்டவைனாகவே அந்தப் புதினத்தை மீண்டும் பலமுறை வாசித்து வருகிறேன். காலச்சுவடு வெளியிட்டுள்ள வேள்வித் தீ புதினத்தின் […]

மேலும்

காலம் சென்றுவிடும் சொல் நிற்கும்

கு. ஜெயபிரகாஷ் “சொல்லுன்னா என்னா, அது அர்ச்சுனன் வில்லு. எடுக்கிறப்ப ஒண்ணு தொடுக்கிறப்ப நூறு. படுறப்ப ஆயிரம்” (அறம் கதையில் இருந்து).  எம்.வி.வி என்று அழைக்கப்படும் எம்.வி.வெங்கட்ராமனின் காதுகள் நாவலுக்குப் பிறகு சில வருடங்கள் கழித்தே அவரின் சிறுகதைத் தொகுப்பு வாசிக்கக் கிடைத்தது.  தன் மகளின் திருமணச் செலவிற்காக மொத்தமாக பழனியப்பா பிரதர்ஸ் நிறுவனத்திற்கு “நாட்டுக்கு உழைத்த நல்லவர்கள்” என்ற தலைப்பில் 40க்கும் மேற்பட்ட புத்தகங்களை இரவுபகலாக கைகள் வீங்க எழுதியவர்  எம்.வி.வியே. அவரின் முதல்  சிறுகதை […]

மேலும்