தெறிப்புகளுக்குள் ஒளிந்திருக்கும் திறவுகோல்
அதீதன் ‘கவிதைகள் கேள்விகளைக் கேட்கின்றன, நாமோ அவற்றுக்கான பதில்களை அவற்றிடமே தேடிக்கொண்டிருக்கிறோம்’. இதைத்தான், கவிதையின் சிறப்பாக உணர்கிறேன். கவித்துவத்தின் மாயவெளியில் அலைகிற வாசகனுக்குப் புலப்படும் யாவுமே கவிதையின் சாயலன்றி வேறில்லை. அவைதரும் சாத்தியப்பாடுகளைப் பின்தொடரும் ஒரு வாசகனாகத் தயாராகிக்கொண்டிருக்கிற எண்ணிலடங்கா பெருங்கூட்டத்தில் ஒவ்வொருவரும் தமக்கான தர்க்கநியாயங்களைக் கொண்டு கவிதைகளை அணுகுகின்றனர். அதை எழுதியவர், அப்பெருங்கடலின் ஒற்றைத்துளியாகக் கலக்கும்போது அவருக்கு இதுவரையில் அறிந்திடாத, கவிதையின் பரிமாணம் புலப்படத் தொடங்குகிறது,. இந்நிலையில், ஒரு கவிதை, வாசகனுக்குத் தருவது/ தரவேண்டியது/ தந்துகொண்டிருப்பது/ […]
மேலும்