அதீதன் கவிதைகள்

நண்பகல் சாலை விரைகிற வாகனத்தின் ஸ்தம்பித்தலில்முழித்த குழந்தையைஇதமாய் மார்போடணைத்துச் சமாதானப்படுத்துகிறாள்பின்னிருப்பவள்செந்நிறத்தில் பொதிந்த பார்வைக்குள்ஊடாடும் நினைவுகளின் அணிவகுப்புகண்ணோரம் துளிர்த்த நீரைத் துடைத்தவாறேநெற்றியில் முத்தமிடச் சிணுங்கிய பிள்ளையின்உடலெங்கும் பால்வாசனைமீண்டும் மீண்டும் முகர்ந்து பரவசம்கொள்கிறவளின்மார்பு கனக்கத் தொடங்குகிறதுஒலிகளின் தொடர் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கும்சந்தடிமிகுந்த சாலையில் காத்திருக்கும் அனைவரும்பொறுமையிழக்கும் வேளைகெக்கலித்துச் சிரிக்கிறது மஞ்சள் வண்ணம்அவசரமாக சாவிகளைத் திருகிமுடுக்கப்படும் மோட்டார்களின் இரைச்சலில்உறக்கம் கலைந்திடக்கூடாதென பதைக்கிறாள்அரைக்கண் மூடித் தூங்கும் மழலைமெல்ல நகைக்கிறதுஅர்த்தம் புரிந்ததென பதிலுக்குப் புன்னகைக்கிறாள்பச்சைக்கு மாறிய ஒளிக்குப் பணிந்துஅடிஅடியாய் நகர்கின்றன வாகனங்கள்புழுங்கும் நண்பகலின்வெக்கையைச் சமாளிக்க இயலாமல்திணறுகிறது […]

மேலும்
தபுதாராவின் புன்னகை

தெறிப்புகளுக்குள் ஒளிந்திருக்கும் திறவுகோல்

அதீதன் ‘கவிதைகள் கேள்விகளைக் கேட்கின்றன, நாமோ அவற்றுக்கான பதில்களை அவற்றிடமே தேடிக்கொண்டிருக்கிறோம்’. இதைத்தான், கவிதையின் சிறப்பாக உணர்கிறேன். கவித்துவத்தின் மாயவெளியில் அலைகிற வாசகனுக்குப் புலப்படும் யாவுமே கவிதையின் சாயலன்றி வேறில்லை. அவைதரும் சாத்தியப்பாடுகளைப் பின்தொடரும் ஒரு வாசகனாகத் தயாராகிக்கொண்டிருக்கிற எண்ணிலடங்கா பெருங்கூட்டத்தில் ஒவ்வொருவரும் தமக்கான தர்க்கநியாயங்களைக் கொண்டு கவிதைகளை அணுகுகின்றனர். அதை எழுதியவர், அப்பெருங்கடலின் ஒற்றைத்துளியாகக் கலக்கும்போது அவருக்கு இதுவரையில் அறிந்திடாத, கவிதையின் பரிமாணம் புலப்படத் தொடங்குகிறது,. இந்நிலையில், ஒரு கவிதை, வாசகனுக்குத் தருவது/ தரவேண்டியது/ தந்துகொண்டிருப்பது/ […]

மேலும்