நுண்மியும் நன்மை தரும்

குடந்தை சத்யா இப்படி நடக்கும் அல்லது இப்படி நாம் நடந்து கொள்வோம் என்று கனவிலும் நினைத்துப் பார்த்திடாத சூழல் எழுந்துள்ளது. மின்னணு, தகவல் தொழில்நுட்பம், பிற கோள்களில் குடியேறும் முயற்சி, செயற்கைக் கோள்களை உருவாக்கும் அறிவாற்றல் என மனிதன் சிறகுகளின்றி பறந்து, பயணித்து வருகிறான். அச்சமூட்டும் தோற்றம் கொண்ட பெரிய விலங்குகளையும் வேட்டையாடி கூண்டில் அடைத்துவிடும் வல்லமை பெற்றவன் என்று தனது வீரத்தைப் பரைசாற்றிக் கொள்கிறான். ஆனால் இன்று கண்ணுக்குத் தெரியாத தீநுண்மிக்குப் பயந்துபோய், உயிர்மேல் கொண்ட […]

மேலும்

எம்.வி.வியும் நானும்

இராம. குருநாதன் 1994. ஒரு பகல்வேளையில் குடந்தை பஞ்சாமி அய்யர் உணவகத்தில் இருந்து எழுத்தாளர் விட்டல்ராவ்  உணவு உண்டுவிட்டு வெளியே வரும்போது என்னைப் பார்த்ததும், ”சென்னையிலிருந்து எப்போது வந்தீர்கள்” என்று என்னைக் கேட்டார். ”எனக்குச் சொந்த ஊர் இதுதானே” என்றேன். ”சரி இப்போ எங்க போறதா இருக்கீங்க” என்றேன். ”தோப்புத்தெருவுக்குப் போகணும். வழி தெரியலே” என்றார். ”நான் உடனே எம்.வி.வி சாரைப் பார்க்கப் போறிங்களா” என்றேன்.  சரியான கோடைக்காலம். அக்னி நட்சத்திர சமயம்.  வெய்யில் கொளுத்தியது. நானும் […]

மேலும்
எம்.வி.வெங்கட்ராம்

வேள்வித்தீ நாவல் இடங்களில் ஒரு யாத்திரை

ராணிதிலக் எம்.வி.வி நூற்றாண்டு முன்னிட்டு, வேள்வித்தீ நாவலில் வரும் இடங்களைக் காணப் புறப்பட்டேன். அதிகாலை, காலை, நண்பகல், மாலை, இரவு என எல்லா நேரங்களிலும் சென்றிருக்கிறேன். முதன்முறையாக, எம்.வி.எம் அவர்களின் தோப்புத்தெரு வீட்டைப் பார்த்தேன். இரண்டு மாடிக் கட்டிடத்தின் முகப்புச்சுவரின் எம்.வி.எம். இந்தத் தோப்புத்தெருவை இப்பொழுதும் பார்த்துக்கொண்டிருக்கிறார், கண்ணன் என்னும் கதாப்பாத்திரம் வழியாக.  அவருடைய பழைய வீட்டை ரவிசுப்ரமணியனும், தேனுகாவின் மகன் வித்யாசங்கரும்  சொல்லும்போது, இரண்டு ஓட்டுவீடுகளை என் மனதிற்குள் வரைந்து பார்த்தேன்.  அது எம்.வி.எம்மின் வீடாக […]

மேலும்
எம்.வி.வெங்கட்ராம்

எம்.வி.வெங்கட்ராமின் பைத்தியக்காரப் பிள்ளை என்கிற சித்திரக் கேன்வாஸ்

வியாகுலன் அருகருகே சுவாரஸ்யமிக்க நண்பர்கள் வசிக்கிறார்கள். யார் அந்த சுவாரஸ்யமான நண்பர்கள்? ஒருவர் கரிச்சாங்குஞ்சு என்கிற நாராயணசாமி, இன்னொருவர் தி.ஜா என்கிற தி.ஜானகிராமன், மற்றொருவர் எம்.வி.வி என்கிற எம்.வி.வெங்கட்ராம். கு.ப.ராஜகோபாலனின் எழுத்தால் கவரப்பெற்று தங்கள் ஆளுமைக்குள் இலக்கியத்தை உருக்கொள்ளச் செய்த பாடைப்பாளிகள் மூவரும். எம்.வி.வெங்கட்ராம் பன்முக ஆளுமை கொண்டவர். ஒரு சிறப்பான எழுத்துமுறை எந்தெந்த வகைகளில் சாத்தியமாகிறது. அதன் உத்தி, உருவம், உள்முகம் இந்தக் கட்டமைப்புகளை மீறி இன்னொன்றின் உறவையும் அது தேடுகின்றது. அது தேடுகிற அழகே […]

மேலும்

ஆழத்தில் உறங்கும் கனவு – எம்.வி.வெங்கட்ராமின் ‘இனி புதிதாய்’

பாவண்ணன் என் தந்தையின் நண்பரொருவர் இருந்தார். அவரைச் சித்தப்பா என்று அழைப்பேன் நான். அவரும் தையல் தொழிலாளி. வறுமை மிகுந்த குடும்பச் சூழல். மூன்று பெண் பிள்ளைகள். ஒரே மகன். வீட்டின் ஆண் வாரிசு என்பதால் அவன் கூடுதலான செல்லம் கொடுத்து வளர்க்கப்பட்டான். அதுவே பெரிய பிரச்சனையானது. ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்தபட்சமாக இரண்டாண்டுகளுக்காவது தங்கிவிட்டுத்தான் அடுத்த வகுப்புக்குச் செல்வான். தலைமை ஆசிரியரே ஒருமுறை சித்தப்பாவைப் பார்த்து ‘அவனுக்குப் படிப்பு வருதோ இல்லையோ மத்ததயெல்லாம் கத்துக்குவான் போல. பேசாம […]

மேலும்

37, தோப்புத் தெரு

சமஸ் 37, தோப்புத் தெரு. ஒரு காலத்தில் தமிழ் எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் கும்பகோணத்தில் மிக பரிச்சயமான முகவரி இது. தறிக்கூடங்களின் ஓயாத தறியோசையுயும் நெசவாளர்களின் புழக்கமும் நிறைந்த தோப்புத் தெருவில் கதவிலக்கம் 37ஆம் எண் கொண்ட வீடு ஒரு விதிவிலக்கு.பகலெல்லாம் நெசவிலும் இரவெல்லாம் கனவிலும் கரையும் அந்தத் தெரு மனிதர்கள் வாழ்விலிருந்து முற்றிலும் வேறுபட்ட வாழ்க்கையை வரித்துக்கொண்ட ஒரு மனிதர் இங்கு வாழ்ந்தார்; தமிழ்ச் செவ்வியல் புதினங்களில் ஒன்றான ‘வேள்வித்தீ’யின் கரு உருவான இடமும் ‘தேனீ’ இலக்கிய […]

மேலும்
எம்.வி.வெங்கட்ராம்

எம்.வி.வெங்கட்ராமின் நித்ய கன்னி நாவல் -ஒரு பெண்ணிய பிரதி

வெளி ரங்கராஜன் ஒரு பெண்ணின் உடல், மனம் இரண்டும் அறத்தின் பெயராலும், தர்மத்தின் பெயராலும் மிகக் கொடூரமான சாத்வீக வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்படுவதை புராணகால வாழ்வின் ஊடாகப் பேசும் ஒரே தமிழ்  நாவல் இது (நித்ய கன்னி முன்னுரையில் ஜே.பி.சாணக்யா).சாணக்யாவின் இப்பார்வை இந்த நாவலின் ஒரு ஆதாரமான இழையைத் தொட்டுச் செல்கிறது.மணிக்கொடி எழுத்தாளரும்,சாகித்ய அகாதெமி விருது பெற்றவருமான எம்.வி.வெங்கட்ராம் 1955இல் எழுதிய நாவல் இது. நம்முடைய தொன்மை வரலாறு மற்றும் கலாச்சாரப் பார்வைகள் குறித்த ஆழ்ந்த வாசிப்பும், நவீன இலக்கிய அணுகுமுறை […]

மேலும்

பின்னிரவில் பெய்த பெரும் மழை

ரவிசுப்பிரமணியன் மைசூர் வெங்கடாசலபதி வெங்கட்ராம் என்கிற எம்.வி.வி., தனது பதினாறாம் வயதில் எழுதிய ‘சிட்டுக்குருவி’ என்ற முதல் கதையே கு.ப.ராவாலும், ந.பிச்சமூர்த்தியாலும் வாசிக்கப்பட்டு அவர்கள் வாழ்த்துக்களோடு அவர்களாலேயே மணிக்கொடி இதழுக்கு அனுப்பப்பட்டு அவ்விதழில் பிரசுரமான கீர்த்தி பெற்றது. அதன் பின் கிட்டத்தட்ட அவரது பதினெட்டுக் கதைகள் மணிக்கொடியில் வந்தன. இளம் வயதில் முதல் கதைக்கே அப்படி பெருமை கிடைத்த எம்.வி.விக்கு ஐம்பத்தி ஆறு ஆண்டுகள் கழித்து அவரது காதுகள் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது தரப்பட்டது. காதுகள் […]

மேலும்

இருட்டொளி

கல்யாணராமன் 1 அப்போது நான் ஒரு தி.ஜானகிராமன் பைத்தியம். அப்போதென்ன அப்போது? இப்போதும்தான். பின் அந்த அப்போது எதற்கு? இங்கே அது சுமார் 30 வருடங்களைக் குறிப்பதற்காகச் சொல்லப்படுகிறது. என் பதினேழாம் வயதில் நான் மோகமுள்ளைப் படித்தேன். (அதற்குமுன், என் பதினைந்தாம் வயதில், பத்தாம் வகுப்புத் தேர்வெழுதி முடித்திருந்த கோடை விடுமுறையில், மரப்பசுவையும் வாசித்திருந்தேன்.). மோகமுள்ளில் எம்.வி.வெங்கட்ராமைப் பற்றி, “வெங்கடராமன், நீங்கள் இலட்சத்தில் ஒருவர்_” எனப் பாபு தழுதழுப்பான். அந்த வரி மனத்தில் அப்படியே நிற்கிறது. அப்போதுதான், […]

மேலும்
வேள்வித்தீ நாவலில் வரும் பிர்மன் கோயில் தெருவில் உள்ள செளராஷ்டிரா சபையிலுள்ள எம் வி வெங்கட்ராம் புகைப்படம்

‘இரண்டின்’ யாத்திரை

ராணிதிலக் உயிரின் யாத்திரையை வாசிக்கும்போது, இரண்டு சக்கரங்கள் கொண்டு, யாருமற்ற சாரதியுடன், தானே தனியாகச் சுற்றி லயிக்கும் ஒரு மாட்டுவண்டியை ஞாபகம் கொண்டுவருகிறது. ஒரு மண்பாதை, இரண்டு மாடுகள், இரண்டு சக்கரங்கள் கொண்டு ஒரு மாட்டுவண்டி சென்றுகிறது. ஓட்டுகிறவனும் இல்லை. சுமையும் இல்லை. ஆனால் எல்லாம் இருப்பதான மாயையைத்தான் உயிரின் யாத்திரை நாவல் தருகிறது. சதாசிவம், ராஜா, ராணி, கோபு, மீனா – இந்த ஐந்து பாத்திரங்களின் இந்த ஜென்ம, போன ஜென்மக் கதைகள்தான் இந்நாவல். கனவுகள், […]

மேலும்