அரோரா

கணங்களின் நடனம்

ராணிதிலக் சாகிப்கிரான் கவிதைகளின் அறிமுகம், வண்ணச்சிதைவு தொகுப்பின் வழியாகத்தான் அமைந்தது. படிமமும் குறியீடுகளும் நிறைந்திருந்த தொகுப்பு அது. வாழ்வின் கணங்களில் தோன்றும் தத்துவம் உரையாடல் கொண்ட தொகுப்பு முழுவதும் மொழி முதன்மையாகியிருந்தது. ஓருசேர அபியையும் சி.மணியையும் பிரமிளையும் ஞாபகம்செய்த வரிகள் அவை. மொழி ஒரு குறியீடாகி, படிமமாகி, அரூபக் கவிதைகள் அவை. சாகிப்கிரானின் ஆளுமை முழுவதும் திரைகளுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டிருந்தது. சமீபத்தில் வந்த ‘அரோரா’ அப்படியில்லை. குறைந்தபட்சம் ஐந்து தடவையாவது வாசித்திருப்பேன். அரோரா என்பது துருவ ஒளி. வட, தென்துருவங்களில் […]

மேலும்