சாரம்

ஹருகி முரகாமிஆங்கிலத்திலிருந்து தமிழில்: ஸ்ரீதர்ரங்கராஜ் இவ்வாறாக, என்னுடைய இளம் நண்பன் ஒருவனுக்கு என்னுடைய பதினெட்டு வயதில் நடந்த விநோதமான சம்பவத்தைச் சொல்லிக்கொண்டிருந்தேன். எதனால் அந்தப் பேச்சு வந்தது என்று நினைவில்லை. நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது எப்படியோ வந்துவிட்டது. அது எப்போதோ வெகுகாலத்துக்கு முன்பாக நடந்த விஷயம். புராதன வரலாறு. அதற்கு மேலாக, அந்தச்சம்பவம் குறித்து என்னால் எப்போதும் எந்தவொரு முடிவுக்கும் வரமுடியவில்லை. “அப்போது மேல்நிலைப்பள்ளியை முடித்திருந்தேன், ஆனால் இன்னும் கல்லூரிக்குச் செல்லவில்லை” என்று விளக்கினேன். “கல்லூரி ரோனின்* என்பார்களே […]

மேலும்

கவர்ச்சி

எம். வி. வேங்கடராமன் மாயை பல உருவத்தில் வடிவெடுத்து ஆனந்தம் பெறாமல் தடை செய்கிறது. அதை துணிந்து மற்றவர்கள் பாக்கியவான்கள். நினைக்கிறேன்; ஏனென்றால் நான் நினைக்க வைக்கப்படுகிறேன். சொல்லுகிறேன்;  ஏனென்றால் நான் சொல்ல வைக்கப்படுகிறேன். செய்கிறேன்;  ஏனென்றால் நான் செய்ய வைக்கப்படுகிறேன். என்னால் எவ்வளவு அழகாய் நினைக்கப்படுகிறது! அந்த இரவின் பிற்பகுதியில் என் தூக்கம் கலைந்தது.   தூங்கப்போகும் முன் என் மனதில் ‘ஏதோ வருகிறது, ஏதோ வருகிறது’ என்னும் ஒரு  நினைவு வலுவாக இருந்தது.  என்ன வரும்,  […]

மேலும்

மறக்க முடியுமா?

எம்.வி.வெங்கட்ராமன் “என்ன செட்டியார்வாள். ஒரு மாதிரியாக இருக்கிறீர்கள்? ஏதாவது விசேஷம் உண்டோ?” என்று கேட்டுக்கொண்டே குப்புசாமி செட்டியாரின் பக்கத்தில் ஒரு பலகைமீது உட்கார்ந்தேன். “வாருங்கள்.  ஒன்றும் இல்லையே….“ என்று செட்டியார் இழுத்த விதத்திலிருந்தே ஏதோ விஷயம் இருக்கிறது என்ற பொருள் தொனித்தது. குப்புசாமி செட்டியார், எங்கள் வட்டாரத்தில் உள்ள ஒரு பெரிய மளிகைக் கடையின் உரிமையாளர்.  அவருடைய வாடிக்கைக்காரனான எனக்கும் அவருக்கும் எற்பட்ட பரிச்சயம் நாளடைவில் நெருங்கிய நட்பாகவே மாறிவிட்டது.  ஊர்க் காரியங்களுக்காகப் பணவசூல் செய்யும் பொதுநலப் […]

மேலும்
ஓவியம்: சாகர்

புரட்சிப்பெண்

எம்.வி.வெங்கட்ராம் எளிமையே  வடிவெடுத்து  வந்ததுபோல் வெண்மையான நூல் சேலையும் ரவிக்கையும் உடுத்திக்கொண்டு பிரகாசமாய் உள்ளே புகுந்த சாவித்திரியைப் பார்த்த சீனிவாச ஐயரின் மனதில் முதலில் இயற்கையான ஓர் அமைதிதான் ஏற்பட்டது; ஆனால்,  மறுவினாடி, தம்முடைய மகள் இவ்வளவு ஏழ்மைக் கோலத்தில் காட்சி அளிக்கிறாள் என்ற எண்ணம் அவருக்குக் கொஞ்சம் வருத்தம் உண்டாக்கத்தான் செய்தது.  “வா, அம்மா உட்காரு” “சொந்த வீட்டிலேயே என்னை விருந்தாளி ஆக்கி விட்டீர்களே!”  என்று சிரித்துக்கொண்டே தகப்பனாருக்கு எதிரிலிருந்த நாற்காலியில் உட்கார்ந்தாள் சாவித்திரி. ” […]

மேலும்
ஓவியம்: உகி

ஆனா இம்மன்னா மாவன்னா ஆனா இப்பன்னா பாவன்னா

எம்.வி.வெங்கட்ராம் 1 ஒருநாள் மாலை பள்ளிக்கூடத்திலிருந்து மிகவும் அவசரமாய் வீட்டுக்குத் திரும்பினேன்.  வீட்டில் நான் தாராளமாக நுழைந்துவிட முடியாது.  என் தகப்பனார் கண்களில் விழுந்து விடக்கூடாது; வீட்டின் முன் கட்டிலேயே குமாஸ்தாக்களிடம் கணக்குச் சொல்லிக் கொண்டோ, பார்சல் கட்டிக்கொண்டோ அல்லது நெசவாளர்களுக்குப்  பட்டு நிறுத்துக் கொண்டோ, திட்டிக் கொண்டோ இருப்பார். அவர் பார்வை என் மீது விழுந்து விட்டால் போதும், உடனே ஏதாவது வேலை சொல்வார். அன்றைக்கு என் அதிர்ஷ்டம்.  அப்பா வெளியே போயிருந்தார். வீட்டின் கடைக் […]

மேலும்
இடாலோ கால்வினோ

செய்ய வைத்தல்

இடாலோ கால்வினோதமிழில்: பிரம்மராஜன் அங்கே எல்லாமே தடை செய்யப்பட்ட ஒரு நகரம் இருந்தது. இப்போது அங்கு தடை செய்யப்படாதிருந்த ஒரே விஷயம் தள்ளு-பூனை* விளையாட்டுதான் என்பதால், நகரத்தின் பிரஜைகள், நகரத்தின் பின்புறமிருந்த புல்படுகைகளில் குழுமி அங்கே அந்த நாளை தள்ளு-பூனை விளையாடிக் கழிக்கும் வழக்கமிருந்தது. விஷயங்களைத் தடை செய்யும் சட்டங்கள் ஒன்றடுத்து ஒன்றாக அமல்படுத்தப்பட்டு வந்ததாலும் எப்போதுமே தகுந்த காரணத்துடன் கொண்டுவரப்பட்டதாலும் யாருக்குமே அவை குறித்து எந்தப் புகாரும் செய்ய இருக்கவில்லை என்பதோடு அவற்றுக்குப் பழக்கப்படுத்திக் கொள்வதிலும் […]

மேலும்

துயில்

ஜீ.முருகன் இதுபோன்ற அகாலப் பயணத்தை பல முறை அவன் யோசித்திருக்கிறான்.  அவன் மனம் அதிக வலியை உணரும் தருணங்களிலெல்லாம் இந்த சிந்தனை அவனுக்கு வந்திருக்கிறது, ஆறுதல் அளித்திருக்கிறது. அப்போதெல்லாம் அதை நோக்கி அவனை முழுவிசையோடு தள்ளக்கூடிய எதுவும் அவன் பின்னால் இல்லையா அல்லது அந்த கனத்தின், சஞ்சலம் மிக்க மனதின் யோசனை என அவன் எண்ணினானா தெரியவில்லை, அப்பயணம் கைகூடவில்லை. ஆனால் இப்போது எல்லாம் வழிவிட்டு, வரவேற்று நிற்கிறதாக இருக்கலாம். இவ்வளவு நிச்சயத்துடன் அவனை வழி அனுப்பி […]

மேலும்

நீலா

ஜீ. முருகன் அந்த மாநகரத்தில் புதிதாக உருவாகியிருந்த மையப் பேருந்து நிலையத்தில் அவன் உட்கார்ந்திருந்தான். இப்போதே பேருந்தைப் பிடித்தால் பிற்பகலிலேயே வீடு போய்ச் சேர்ந்துவிடலாம். போய் என்ன செய்வது? இக்கேள்விதான் அவனை இங்கேயே உட்கார வைத்திருந்தது. இந்தப் பேருந்து நிலையம் அவனுக்குச் சௌகரியமான ஓர் உணர்வையேத் தந்தது. வட்ட வடிவில் பிரமாண்டக் கட்டமைப்பைக் கொண்டது அது. அதன் முழுமையைக் காண வெகுதூரம் நடக்க வேண்டும். அவ்வப்போது கேட்ட அறிவிப்பு களையும், பேருந்து களின் இரைச்சலையும், நடத்துநர்களின் விசில் […]

மேலும்

சர்க்கஸ்

ஜீ. முருகன் நிலவின் ஒளியில் காடு பிரகாசமாக இருந் தது. ஆடி மாதத்தின் தொடக்கமாதலால் காற்றின் வேகம் அதிகம் தான். அதனால் இலைகளின் ஓயாத சப்தம் பெரும் இசையென முழங்கிக்கொண்டிருந்தது. சமீபத்தில் பெய்த மழையினால் பாறைகளுக்கிடையில் சலசலத்து இறங்கிக்கொண்டிருந்தன ஓடைகள். ஒரு பாறையின் மேல், தன் கதகதப்பில் படுத்திருந்த குட்டிக்கு கதைசொல்லிக்கொண்டிருந்தது தாய்மான். ‘முன்னொரு காலத்தில…’, ‘ஒரு காட்டுல…’, ‘ஒரு நாட்டுல…’ எனத் தொடங்கும் கதைகள்தான். வால் அறுந்த ஒரு குரங்கின் கதை, புள்ளப்பூச்சியை விழுங்கிவிட்ட பாம்பின் கதை, […]

மேலும்
Srinivasan Natarajan

சக்தி அழைப்பு

குமாரநந்தன் அன்று விடியற்காலை காளியண்ணன் ஒரு கனவு கண்டார். இளவயது பெண் ஒருத்தி மனதைப் பிசையும்படியான மெல்லிய குரலில் அழுதுகொண்டிருந்தாள். அவள் முகத்தில் இவரின் பாட்டி ஜாடை இருந்தது. இவருக்கும் அழுகை வந்தது. கனவிலேயும் கனவுக்கு வெளியேயும் அவர் கண்கள் கலங்கின. தாயி உன் பிரச்சினை என்ன என்று கேட்டார். வீடு இடிஞ்சி விழற மாதிரி இருக்கு. அதிலேயேதான் ரொம்ப வருஷமா இருக்கேன். வீட்ட எடுத்துக் கட்டினா பரவாயில்ல என்றாள். அவ்வளவு தானேம்மா. இதுக்குப் போயி யாராவது […]

மேலும்