சிறுபத்திரிகை

சிறுபத்திரிகை-உள்ளடக்கம்

தலையங்கம்             நோபல் உரை: கவிஞனும் உலகமும்விஸ்லாவா சிம்போர்ஸ்கா, தமிழில்: சமயவேல் விஸ்லாவா ஸிம்போர்ஸ்கா கவிதைகள்தமிழில்: சமயவேல் மார்க்வெஸைப் பற்றிய தவறான பொருள்கொள்ளல் யுவான் கேப்ரியல் வாஸ்க்வெஸ், தமிழில்: ஸ்ரீதர் ரங்கராஜ் யுவான் கேப்ரியல் வாஸ்க்வெஸ்-உடன் ஓர் உரையாடல்நேர்கண்டவர்: சில்வியா பேட்டர்நோஸ்ட்ரோ, தமிழில்: சா.தேவதாஸ் சிறுகதை: துயில்ஜீ.முருகன் நித்தியா வீரராகு கவிதைகள் ராஜி பத்மநாபன் கவிதைகள் ஜீனத் கவிதைகள் அன்புவேந்தன் கவிதைகள் நேர்காணல்: ‘கவிதைக் கலை’ ஆலன் கின்ஸ்பெர்க்தாமஸ் க்ளார்க், தமிழில்: பாலகுமார் விஜயராமன் ஆலென் கின்ஸ்பெர்க் கவிதைகள்தமிழில்: விஸ்வநாதன் கணேசன் ஸ்ரீநேசன் கவிதைகள் […]

மேலும்
இடாலோ கால்வினோ

செய்ய வைத்தல்

இடாலோ கால்வினோதமிழில்: பிரம்மராஜன் அங்கே எல்லாமே தடை செய்யப்பட்ட ஒரு நகரம் இருந்தது. இப்போது அங்கு தடை செய்யப்படாதிருந்த ஒரே விஷயம் தள்ளு-பூனை* விளையாட்டுதான் என்பதால், நகரத்தின் பிரஜைகள், நகரத்தின் பின்புறமிருந்த புல்படுகைகளில் குழுமி அங்கே அந்த நாளை தள்ளு-பூனை விளையாடிக் கழிக்கும் வழக்கமிருந்தது. விஷயங்களைத் தடை செய்யும் சட்டங்கள் ஒன்றடுத்து ஒன்றாக அமல்படுத்தப்பட்டு வந்ததாலும் எப்போதுமே தகுந்த காரணத்துடன் கொண்டுவரப்பட்டதாலும் யாருக்குமே அவை குறித்து எந்தப் புகாரும் செய்ய இருக்கவில்லை என்பதோடு அவற்றுக்குப் பழக்கப்படுத்திக் கொள்வதிலும் […]

மேலும்
விஸ்லாவா சிம்போர்ஸ்கா

கவிஞனும் உலகமும் விஸ்லாவா சிம்போர்ஸ்கா

நோபல் உரை தமிழில்: சமயவேல் எந்த ஓர் உரையிலும் முதல் வாக்கியம் மிகக் கடினமானது என்று கூறுவார்கள். நல்லது, அந்த ஒன்று எனக்குப் பின்னே இருக்கிறது. ஆனால் எனக்கு ஓர் உணர்வு அதாவது, வரவிருக்கும் வாக்கியங்கள் – மூன்றாவது, ஆறாவது, பத்தாவது, அதற்கு மேலும், கடைசி வரிவரை – கடினமானதாகவே இருக்கும். ஏனெனில் பேச வேண்டியிருப்பது கவிதையைப் பற்றி அல்லவா? உண்மையில், இந்தப் பொருளில் நான் மிகக் கொஞ்சமே பேசியிருக்கிறேன் – ஒன்றுமின்மைக்கு அருகில். மற்றும் எதையாவது […]

மேலும்

விஸ்லாவா சிம்போர்ஸ்கா கவிதைகள்

தமிழில்: சமயவேல் தூங்கும் பொழுது நான் கனவு கண்டேன் எதையோ நான் தேடுவதாக.எங்காவது ஒளிந்து அல்லது தொலைந்து இருக்கலாம்படுக்கைக்கு அடியில், மாடிப்படிகளுக்கு அடியில்,ஒரு பழைய முகவரிக்குக் கீழே. நான் தோண்டினேன் உடையலமாரிகள், பெட்டிகள் மற்றும் இழுப்பறைகள்அர்த்தமில்லாமல் திணிக்கப்பட்ட சாமான்களும் மடத்தனங்களும். எனது சூட்கேஸிலிருந்து நான் உருவினேன்நான் மேற்கொண்ட பயணங்களையும் ஆண்டுகளையும்.. எனது பைகளிலிருந்து நான் உதறினேன்உலர்ந்த கடிதங்கள், குப்பைகள், எனக்கு எழுதப்படாத இலைகள் மூச்சிறைக்க நான் ஓடினேன்வசதியானது, வசதியற்றது வழியாகஇடப்பெயர்வுகள், இடங்கள். நான் தட்டுத் தடுமாறினேன்.உறைபனிக் குகைப்பாதைகள் […]

மேலும்

தலையங்கம்

தமிழில் சிற்றிதழுக்கான தேவை எப்பொழுதும் இருந்தே வந்திருக்கிறது.  அதன் தொடர்ச்சியாக இந்த ‘சிறுபத்திரிகை’யின் பங்களிப்பும். ஒருவர், தான் நினைக்கும் அத்தனை விஷயங்களையும் பகிர்ந்துகொள்வதற்கான, சுதந்திரமான தளம் என்ற அளவில் முகநூலிலும் வலைதளங்களிலும், இலக்கியம் என்பதாக பகிர்ந்துகொள்ளப்படும் எழுத்துகள் பெரும்பாலானவை அதுகுறித்த புரிதலற்ற பாவனைகளாகவே இருப்பது கண்கூடு. தற்போது புத்தகங்களின் உற்பத்தி பெருக்கமடைந்துவரும் அதேவேளையில், வாசிப்பு பழக்கம் குறைந்துவருவதே அதற்கான காரணமாக இருக்கமுடியும். ஆகவே, படைப்பிலக்கியம் குறித்த நம்முடைய கலை-இலக்கிய மதிப்பீடுகளைக் கூர்மைப்படுத்த வேண்டிய தருணமிது. மேலும் நடுத்தர […]

மேலும்
கேப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ்

மார்க்வெஸைப் பற்றிய தவறான பொருள்கொள்ளல்

யுவான் கேப்ரியல் வாஸ்க்வெஸ்தமிழில்: ஸ்ரீதர் ரங்கராஜ் கேப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ் எழுதிய ‘நூற்றாண்டுகாலத் தனிமை’யின் 40ம் ஆண்டு நிறைவு விழாக் கொண்டாட்டங்கள் சமீபத்தில் நடந்து முடிந்திருக்கின்றன. கொலம்பியாவில் மிகுந்த ஆரவாரத்துடனும், ஸ்பானிய மொழி பேசும் மற்ற பகுதிகளில் சற்றே குறைவான ஆரவாரத்துடனும் கொண்டாடப்பட்டது. இக்கொண்டாட்டங்களிலுள்ள மிகைத் தன்மை அப்புதினத்தின் உள்ளடக்கம்/உள்ளீடு பற்றிய விளக்கம் கோருவதாக இருக்கிறது. இந்தக் கொண்டாட்டங்கள் ஒரு நட்பின் பிறந்தநாளைக் கொண்டாடுவது போலன்றி, வரலாற்றின் முக்கிய நிகழ்வொன்றினை கொண்டாடுவது போலும் (ஒரு சர்வாதிகாரியின் பிறந்த […]

மேலும்
யுவான் கேப்ரியல் வாஸ்க்வெஸ்-உடன் ஓர் உரையாடல்

யுவான் கேப்ரியல் வாஸ்க்வெஸ்-உடன் ஓர் உரையாடல்

நேர்கண்டவர்: சில்வியா பேட்டர் நோஸ்ட்ரோ, தமிழில்: சா.தேவதாஸ் யுவான் கேப்ரியல் வாஸ்க்வெஸ் (பி 1973): கொலம்பிய நாவலாசிரியர். 2011இல் வெளியான The Sound of Things Falling என்னும் நாவல் இவருக்குப் புகழ்சேர்த்தது. சட்டத்தில் பட்டமும் லத்தீன் அமெரிக்க இலக்கியத்தில் முனைவர் தகுதியும் பெற்றுள்ளவர். பாரீஸில் 3 ஆண்டுகள் பெல்ஜியத்தின் ஆர்டென்னெஸில் ஓராண்டு என வாழ்ந்துவிட்டு, இப்போது சொந்த நகரமான பொகோட்டாவில் வசித்து வருகிறார். இந் நாவலுக்காக 2014ஆம் ஆண்டின் சர்வதேச டப்ளின் இலக்கிய விருது பெற்றிருக்கிறார். […]

மேலும்

துயில்

ஜீ.முருகன் இதுபோன்ற அகாலப் பயணத்தை பல முறை அவன் யோசித்திருக்கிறான்.  அவன் மனம் அதிக வலியை உணரும் தருணங்களிலெல்லாம் இந்த சிந்தனை அவனுக்கு வந்திருக்கிறது, ஆறுதல் அளித்திருக்கிறது. அப்போதெல்லாம் அதை நோக்கி அவனை முழுவிசையோடு தள்ளக்கூடிய எதுவும் அவன் பின்னால் இல்லையா அல்லது அந்த கனத்தின், சஞ்சலம் மிக்க மனதின் யோசனை என அவன் எண்ணினானா தெரியவில்லை, அப்பயணம் கைகூடவில்லை. ஆனால் இப்போது எல்லாம் வழிவிட்டு, வரவேற்று நிற்கிறதாக இருக்கலாம். இவ்வளவு நிச்சயத்துடன் அவனை வழி அனுப்பி […]

மேலும்

நித்தியா வீரராகு கவிதைகள்

முதற்கனியின் ருசி கழுத்தறுபட்ட பிணங்களின் புரையேறிய மாமிசத்தை தன் உருவச்சிலைக்குப் படைத்துக் கொண்டிருந்தான் தேவன் அகாலத்தின் எதிரொளிப்பாக இருள் சூழ்ந்ததொரு பொழுதில் எனை இடைமறித்துக் கூறினாய் காதல் விழிகளில் தொடங்குவது அல்ல வானெங்கும் மீயொளிர காலப் பிரக்ஞையற்றதொரு கணத்தில் நிறைந்த வெண்பசுவின் வயிற்றைக் கிழித்து வெளிவந்த தேவன் விழிகளைக் காதலிப்பதாய்ச் சொன்னான் யுகாந்திரங்களுக்கு முன்னால் விண்மீன்களுக்கிடையில் திரிந்தோமென்றும் முதற்கனி சுவைக்கப்பட்ட நாளில் பூமிக்கு வந்திறங்கியபோது தொலைந்துபோன தேவதை நானே என்றான் மெய்சிலிர்த்த தேவதருணங்களுக்குப் பிறகு மாயை அருளும் […]

மேலும்

ராஜி பத்மநாபன் கவிதைகள்

சொல்வனம் சொற்கள் வழிந்தோடும் நதியின் கரையொன்றில் வெறும் கோடுகளாய் நிரம்பிய கவிதையொன்று கோடுகளின் இடுகுறிகளாய் குறுக்கும் நெடுக்குமாய் சுழிந்தோடும் நீரலைகளை தன்னுள் அமிழ்த்தாமல் நதியின் ஆழத்தில் தொலைந்தது கவிதை நதியின் கரையில் புதிதாய் உயிர்த்ததொரு சொல்வனம் * பிரிவின் மௌனமொழி என்னில் இருந்து உன்னைத் தொலைத்து விட்டதாய் நான் உணர்ந்த நாள் தொட்டு உதடுகளால் உன்னைத் தீண்டிக்கொண்டே இருக்கிறேன் உயிர் கொல்லும் ரணத்தின் உக்கிரத்தைப் போர்த்திக் கொண்டே முன்னெப்போதும் உணரா தாபத்தோடு இதழ்க் கசிவின் இருப்பை கரிக்கும் […]

மேலும்