கேப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ்

மார்க்வெஸைப் பற்றிய தவறான பொருள்கொள்ளல்

யுவான் கேப்ரியல் வாஸ்க்வெஸ்தமிழில்: ஸ்ரீதர் ரங்கராஜ் கேப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ் எழுதிய ‘நூற்றாண்டுகாலத் தனிமை’யின் 40ம் ஆண்டு நிறைவு விழாக் கொண்டாட்டங்கள் சமீபத்தில் நடந்து முடிந்திருக்கின்றன. கொலம்பியாவில் மிகுந்த ஆரவாரத்துடனும், ஸ்பானிய மொழி பேசும் மற்ற பகுதிகளில் சற்றே குறைவான ஆரவாரத்துடனும் கொண்டாடப்பட்டது. இக்கொண்டாட்டங்களிலுள்ள மிகைத் தன்மை அப்புதினத்தின் உள்ளடக்கம்/உள்ளீடு பற்றிய விளக்கம் கோருவதாக இருக்கிறது. இந்தக் கொண்டாட்டங்கள் ஒரு நட்பின் பிறந்தநாளைக் கொண்டாடுவது போலன்றி, வரலாற்றின் முக்கிய நிகழ்வொன்றினை கொண்டாடுவது போலும் (ஒரு சர்வாதிகாரியின் பிறந்த […]

மேலும்
யுவான் கேப்ரியல் வாஸ்க்வெஸ்-உடன் ஓர் உரையாடல்

யுவான் கேப்ரியல் வாஸ்க்வெஸ்-உடன் ஓர் உரையாடல்

நேர்கண்டவர்: சில்வியா பேட்டர் நோஸ்ட்ரோ, தமிழில்: சா.தேவதாஸ் யுவான் கேப்ரியல் வாஸ்க்வெஸ் (பி 1973): கொலம்பிய நாவலாசிரியர். 2011இல் வெளியான The Sound of Things Falling என்னும் நாவல் இவருக்குப் புகழ்சேர்த்தது. சட்டத்தில் பட்டமும் லத்தீன் அமெரிக்க இலக்கியத்தில் முனைவர் தகுதியும் பெற்றுள்ளவர். பாரீஸில் 3 ஆண்டுகள் பெல்ஜியத்தின் ஆர்டென்னெஸில் ஓராண்டு என வாழ்ந்துவிட்டு, இப்போது சொந்த நகரமான பொகோட்டாவில் வசித்து வருகிறார். இந் நாவலுக்காக 2014ஆம் ஆண்டின் சர்வதேச டப்ளின் இலக்கிய விருது பெற்றிருக்கிறார். […]

மேலும்