சாரம்

ஹருகி முரகாமிஆங்கிலத்திலிருந்து தமிழில்: ஸ்ரீதர்ரங்கராஜ் இவ்வாறாக, என்னுடைய இளம் நண்பன் ஒருவனுக்கு என்னுடைய பதினெட்டு வயதில் நடந்த விநோதமான சம்பவத்தைச் சொல்லிக்கொண்டிருந்தேன். எதனால் அந்தப் பேச்சு வந்தது என்று நினைவில்லை. நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது எப்படியோ வந்துவிட்டது. அது எப்போதோ வெகுகாலத்துக்கு முன்பாக நடந்த விஷயம். புராதன வரலாறு. அதற்கு மேலாக, அந்தச்சம்பவம் குறித்து என்னால் எப்போதும் எந்தவொரு முடிவுக்கும் வரமுடியவில்லை. “அப்போது மேல்நிலைப்பள்ளியை முடித்திருந்தேன், ஆனால் இன்னும் கல்லூரிக்குச் செல்லவில்லை” என்று விளக்கினேன். “கல்லூரி ரோனின்* என்பார்களே […]

மேலும்
கேப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ்

மார்க்வெஸைப் பற்றிய தவறான பொருள்கொள்ளல்

யுவான் கேப்ரியல் வாஸ்க்வெஸ்தமிழில்: ஸ்ரீதர் ரங்கராஜ் கேப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ் எழுதிய ‘நூற்றாண்டுகாலத் தனிமை’யின் 40ம் ஆண்டு நிறைவு விழாக் கொண்டாட்டங்கள் சமீபத்தில் நடந்து முடிந்திருக்கின்றன. கொலம்பியாவில் மிகுந்த ஆரவாரத்துடனும், ஸ்பானிய மொழி பேசும் மற்ற பகுதிகளில் சற்றே குறைவான ஆரவாரத்துடனும் கொண்டாடப்பட்டது. இக்கொண்டாட்டங்களிலுள்ள மிகைத் தன்மை அப்புதினத்தின் உள்ளடக்கம்/உள்ளீடு பற்றிய விளக்கம் கோருவதாக இருக்கிறது. இந்தக் கொண்டாட்டங்கள் ஒரு நட்பின் பிறந்தநாளைக் கொண்டாடுவது போலன்றி, வரலாற்றின் முக்கிய நிகழ்வொன்றினை கொண்டாடுவது போலும் (ஒரு சர்வாதிகாரியின் பிறந்த […]

மேலும்

காதலின் கவிதையியல்

ஜேனட் வின்டெர்சன்தமிழில்: ஸ்ரீதர் ரங்கராஜ் ஏன் பெண்களோடு காதல் செய்கிறீர்கள்? என் காதல் பிக்காசோ தனது நீலநாட்களில்1 இருக்கிறாள். முன்பெல்லாம் அவளது விடாய் எப்போதும் சிவப்பு நிறத்தில்தான் இருந்தது. முள்ளங்கியின் சிவப்பு, காளையின் சிவப்பு, வெடித்து விதை பரப்பப்போகும் ரோஜாவின் சூலகச்சிவப்பு. போம்பே2 என்று அழைக்கப்பட்டபோதும், தனது அழிவுக் காலத்தின் போதும் எரிமலைக்குழம்பின் சிவப்பு. அவளின் வீச்சம், அவளின் உவர்ப்பு, உருளும், விரியும் அவளது யோனி. சுமோ வீரனைப்போல அமர்ந்தா ளெனில், தொடைக்கறி ஒத்த தொடைகள், பன்றியின் […]

மேலும்
almond-blossom

பெண்டதாங்

ஸ்ரீதர் ரங்கராஜ் அவரது வித்தியாசமான உடையின் காரணமாகத்தான் முதலில் அவரைக் கவனித்தேன். நேர்த்தியான காட்டன் பேண்ட், அதற்கு நிறப் பொருத்தமான டி-ஷர்ட், அதை பேண்ட்டுக்குள் செலுத்தி அதற்குமேல் ஒரு பெல்ட் எனக் கச்சிதமான உடை, இடது கையில் மணிக்கயிறு, கால்களில் கேன்வாஸ் ஷூ, தலையில் வெளிர் மஞ்சள் அல்லது வெள்ளிநிற பனாமா தொப்பி அணிந்தபடி காலை நடைபயிற்சிக்கு வருவார். அவர் பெயர் என்ன வென்று எனக்குத் தெரியாது. சதுரமான முக வெட்டு, தட்டையான, பரந்த முகம், வெளுத்த […]

மேலும்