எம்.வி.வெங்கட்ராம்

வேள்வித்தீ நாவல் இடங்களில் ஒரு யாத்திரை

ராணிதிலக் எம்.வி.வி நூற்றாண்டு முன்னிட்டு, வேள்வித்தீ நாவலில் வரும் இடங்களைக் காணப் புறப்பட்டேன். அதிகாலை, காலை, நண்பகல், மாலை, இரவு என எல்லா நேரங்களிலும் சென்றிருக்கிறேன். முதன்முறையாக, எம்.வி.எம் அவர்களின் தோப்புத்தெரு வீட்டைப் பார்த்தேன். இரண்டு மாடிக் கட்டிடத்தின் முகப்புச்சுவரின் எம்.வி.எம். இந்தத் தோப்புத்தெருவை இப்பொழுதும் பார்த்துக்கொண்டிருக்கிறார், கண்ணன் என்னும் கதாப்பாத்திரம் வழியாக.  அவருடைய பழைய வீட்டை ரவிசுப்ரமணியனும், தேனுகாவின் மகன் வித்யாசங்கரும்  சொல்லும்போது, இரண்டு ஓட்டுவீடுகளை என் மனதிற்குள் வரைந்து பார்த்தேன்.  அது எம்.வி.எம்மின் வீடாக […]

மேலும்
நிக்கி ஜியோவன்னி

கருப்பு எழுத்துகள்

ராணிதிலக் நீக்ரோவியம் என்னும் வார்த்தையை லியோபோல்டு சிடார்செங்கார் கட்டுரையொன்றின் வழியாகவே அறிமுகம் பெற்றிருக்கிறேன். அந்த அறிமுகம்கூட, தமிழில் முதன்முதலில் இந்திரன் அவர்களின் முயற்சியால் வெளியான, “அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்” என்ற ஆப்பிரிக்க எழுத்துகள் பற்றிய தொகுப்பின் வழியாகத்தான்.  1982இல் வெளியான இந்நூலை, கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பிறகு வாசித்திருக்கிறேன். ஒரு கருப்பு மங்கையின் கண்ணீர் துளி துயரத்தில் சொட்டும் காட்சி கருப்பு இலக்கியம் வாசிக்கும்போது தோன்றுவது இன்னும் தீரவே இல்லை. கண் நீர்த்துளிகள் யாவும் கருப்பாய்த் […]

மேலும்
அடவி கவிதை

தன்னிருப்பிடத்திலிருந்து வெளியேறும் சிறகுகளைப் பின்தொடர்தல்

ஜீவன் பென்னி 1.தனக்கான சிறிய பிரார்த்தனைகளைக் கைவிட்டுவிட்டுநீரில் மூழ்கிக்கொண்டிருக்கிறது வழுவழுப்பற்ற கூழாங்கல். இத்தனை நிறைவானதா உன் வாழ்க்கை!? 2.ஒரு கதவைத் திறக்கிறோம் எண்ணற்ற சாலைகளின் பாடல்களுக்குள் நுழைகிறோம்.ஒரு கதவை இறுக மூடுகிறோம்எண்ணற்ற வலிகளின் காரணங்களைத் தொடர்பறுக்கிறோம்.காலம் எப்போதும் ஒரு சிறு தேவையைப் பரிசளிக்கிறது. 3.நம் இசைக்கோர்வைகள் மிக எளிதாகக் கடவுளைப் படிக்கின்றன.தொலைத்திருந்த ஒற்றை மனதின் ரிதத்தை அதில் தான் தேடிக்கொண்டிருக்கிறோம்.அது அழைத்துச் செல்லும் பச்சைப்புற்களின் தேசத்தில் இருப்பவைகளிலே மனிதன் தான் அதிகம் தேவையுள்ளவனாகயிருக்கிறான்.அதிகம் நோய்மைகொண்டவனாகவுமிருக்கிறான். காலம் ஒவ்வொரு […]

மேலும்
சா

“எல்லோர் வீட்டிலும் இருக்கும் கடுகு”

சிவசங்கர்.எஸ்.ஜே. வானம் பூமி, ஒளி இருள், நீர் நெருப்பு, போன்ற ஆதி இரட்டை எதிர்மறைகளில் ஒன்று வாழ்வும் மரணமும். மனித குலத்தின் தீராப்புதிர். மனிதர்களின்  பிறப்போடு  கூட வளரும் வளர்ப்பு மிருகம். மனிதக் குழுவின் நகைச்சுவை உணர்வுக்கான ஊற்று. புத்தர் தொடங்கி எல்லா ஞானிகளாலும் உணரப்பட்ட, விளக்கப்பட்ட தத்துவக்கூறு. இருத்தலின் அச்சமூட்டும் , முதிர்ச்சியூட்டும் விளங்கா விடுகதை. மரணம்  யாராலும் விடுவிக்க முடியாத கணக்கு. மரணம் எல்லா வீடுகளிலும் இருக்கும் கடுகு.. மரணம் குறித்த விவரணைகள் தத்துவ […]

மேலும்
laura kasischke

லாரா கசிஸ்க் கவிதைகள்

தமிழாக்கம்: சரோ லாமா 1] ஆழமாகப் புதை.கற்கள் மலைபோல் குவிந்துகிடக்கின்றனநான் இன்னும் எலும்புகளைத் தோண்டியெடுக்கவில்லை.எப்படிப்பட்ட மனிதன் நான்? 2] யேகோவா மற்றும் முது மறதி நோய்பட்டினி கிடக்கும் குழந்தையின் கைகளில் தனிச்சிறப்புடைய அளவில் பெரிய வைரம்.வெறுமையான நிலத்தில் அமைதியான கும்பல்.வெம்மை சூழ் பால்கனியில்என் தந்தை நாற்காலியில் அமர்ந்தபடிஆழ்ந்து உறங்குகிறார்.அதே நேத்தில் அவரது மூழ்கடிக்க முடியாத படகு,ஆழ்கடலின் அடியாழத்தில் உட்கார்ந்திருக்கிறது.அதே நேத்தில் அவரது மூழ்கடிக்க முடியாத படகு,கடல் பரப்பில் பயணிக்க காத்திருக்கிறது.அதே நேத்தில் அவரது மூழ்கடிக்க முடியாத படகு,கடற்பயணம் […]

மேலும்

ஏமாந்த பூனை

ஷ்யாம் சுந்தர் ஒரு ஊரில் ஒரு நாயும், ஒரு பூனையும் வசித்து வந்தது. அந்த நாய் பசியும் பட்டினியுமாக இருந்தது. மூலை முடுக்கெல்லாம் ஏதாவது உணவு உண்ண கிடைக்குமா என தேடித் திரிந்தது. அப்பொழுது அதன் கண்ணில் ஒரு அதிரசம் தென்பட்டது. நாய் அருகில் வந்த பிறகுதான் தெரிந்தது, அந்த அதிரசத்திற்கு நேராக ஒரு பூனை வருத்தமாகவும், மனதில் மனவலியையும் கொண்டு இருந்தது. அந்த நாய் என்னடா இது கண் முன் உள்ள அதிரசத்தை உண்ணாமல் இருக்கிறதே […]

மேலும்
எம்.வி.வெங்கட்ராம்

எம்.வி.வெங்கட்ராமன்

தி.ஜானகிராமன் இலக்கிய வட்டம் இதழில், “மூன்று இலக்கிய ஆசிரியர்கள்“ என்ற தலைப்பில் தி.ஜா  ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.  எம்.வி.வி, கிருத்திகா, பராங்குசம்  ஆகியோரே அந்த மூவர். அவர்களில் ஒருவரான எம்.வி.வி. குறித்த செய்திகளை மட்டும்  இக்கட்டுரையிலிருந்து எடுத்து இங்கே தனியாகப் பதிவிடப்படுகிறது பண்டிதர்களிடமும் வாசகசர்களிடமும் பிழைப்புத்  தருபவர்களிடமும் தர்மோபதேசிகளிடமும் பயப்படுகிறவர்கள் உண்மையைச் சொல்லப் பயப்படுகிறார்கள்.  அந்தக் கிலியில் உண்மை அவர்களுக்கே நாளாவட்டத்தில் புலனாகாமல் போய் விடுகிறது.   தான் ஒரு மனிதன் தனக்கு ஒரு தனித்தன்மை உண்டு என்பதையும் […]

மேலும்
எம்.வி.வெங்கட்ராம்

எம்.வி.வெங்கட்ராமின் பைத்தியக்காரப் பிள்ளை என்கிற சித்திரக் கேன்வாஸ்

வியாகுலன் அருகருகே சுவாரஸ்யமிக்க நண்பர்கள் வசிக்கிறார்கள். யார் அந்த சுவாரஸ்யமான நண்பர்கள்? ஒருவர் கரிச்சாங்குஞ்சு என்கிற நாராயணசாமி, இன்னொருவர் தி.ஜா என்கிற தி.ஜானகிராமன், மற்றொருவர் எம்.வி.வி என்கிற எம்.வி.வெங்கட்ராம். கு.ப.ராஜகோபாலனின் எழுத்தால் கவரப்பெற்று தங்கள் ஆளுமைக்குள் இலக்கியத்தை உருக்கொள்ளச் செய்த பாடைப்பாளிகள் மூவரும். எம்.வி.வெங்கட்ராம் பன்முக ஆளுமை கொண்டவர். ஒரு சிறப்பான எழுத்துமுறை எந்தெந்த வகைகளில் சாத்தியமாகிறது. அதன் உத்தி, உருவம், உள்முகம் இந்தக் கட்டமைப்புகளை மீறி இன்னொன்றின் உறவையும் அது தேடுகின்றது. அது தேடுகிற அழகே […]

மேலும்

எம்.வி.வியும் நானும்

இராம. குருநாதன் 1994. ஒரு பகல்வேளையில் குடந்தை பஞ்சாமி அய்யர் உணவகத்தில் இருந்து எழுத்தாளர் விட்டல்ராவ்  உணவு உண்டுவிட்டு வெளியே வரும்போது என்னைப் பார்த்ததும், ”சென்னையிலிருந்து எப்போது வந்தீர்கள்” என்று என்னைக் கேட்டார். ”எனக்குச் சொந்த ஊர் இதுதானே” என்றேன். ”சரி இப்போ எங்க போறதா இருக்கீங்க” என்றேன். ”தோப்புத்தெருவுக்குப் போகணும். வழி தெரியலே” என்றார். ”நான் உடனே எம்.வி.வி சாரைப் பார்க்கப் போறிங்களா” என்றேன்.  சரியான கோடைக்காலம். அக்னி நட்சத்திர சமயம்.  வெய்யில் கொளுத்தியது. நானும் […]

மேலும்

ராஜம் தற்கொலைக்கு யார் காரணம்?

த.ராஜன் எம்.வி.வெங்கட்ராம் எழுதிய ‘பைத்தியக்காரப் பிள்ளை’ சிறுகதை வாசிப்பு… எம்.வி.வெங்கட்ராம் நூற்றாண்டு இது. நாவல்களாலேயே (‘காதுகள்’, ‘வேள்வித் தீ’, ‘நித்யகன்னி’) அவர் இன்றைய தலைமுறையால் அடையாளம் காணப்படும் சூழலில் அவரது கிளாஸிக் கதைகளில் ஒன்றை வாசித்துப்பார்க்கத் தோன்றியது. முன்னோடிகளை நினைவுகூர்ந்து புதிய தலைமுறைக்கு வழிகாட்டும் சமகாலப் படைப்பாளிகள் பலரும் ‘பைத்தியக்காரப் பிள்ளை’ கதையை எம்.வி.வெங்கட்ராமின் மிகச் சிறந்த கதையாக மதிப்பிட்டிருக்கிறார்கள். இந்தக் கதையைப் பற்றி எழுதியவர்கள் ஒவ்வொருவரும் தவறாமல் அம்மா பாத்திரத்தைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்; அம்மா பாத்திரத்தைக் குறிப்பிடாமல் […]

மேலும்